வங்கி கணக்குகளை வங்கிகள் ஏன் முடக்கி வைக்கின்றன?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

வங்கி கணக்குகள் முடக்கப்படும் காரணங்கள் என்னென்ன?
சென்னை: வங்கி உங்கள் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துவிட்டால் நீங்கள் அந்த கணக்கைத் தொடர முடியாது. உடனே நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலும் அவ்வாறு உங்கள் வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டால் நீங்கள் காசோலை கொடுத்தாலும், அது நிறுத்தி வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கி, செக்யூரிட்டிஸ் அன்ட் போர்ட் ஆப் இந்தியா, வருமான வரி அதிகாரிகள் அல்லது நீதிமன்றம் போன்றவை உங்கள் வங்கிக் கணக்குளை முடக்கி வைக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.

முடக்கி வைக்க காரணம்

1. லோன்களை திருப்பிச் செலுத்தாமல் இருந்தால்
2. வரி கட்டமல் இருந்தால்
3. நிறுவனத்திற்கோ அல்லது தனிப்பட்ட நபருக்கோ நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை என்றால்
4. உங்கள் வங்கி நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டால்
5. சட்டத்திற்கு எதிராக உங்கள் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தினால்
6. சட்டத்திற்கு புறம்பான வழிகளில் நீங்கள் பணத்தை ஈட்டுகிறீர்கள் என்று தெரிந்தால்
6. தீவிரவாத செயல்களுக்கு நீங்கள் வங்கிக் கணக்கு மூலம் உதவி செய்தால்

மேலே கூறப்பட்டிருக்கும் காரணங்களுக்காக உங்கள் வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்படலாம்.

சமீபத்தில் கிங்பிஷர் நிறுவனம் ரூ.40 கோடி வரியைச் செலுத்த முடியாமல் போனதால் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்பட்டது. மேலும் சஹாரா குழுமத்தின் வங்கிக் கணக்கும் உச்ச நீதிமன்றம் மற்றும் செக்கியூரிட்டிஸ் எக்சேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா ஆகியவற்றால் முடக்கி வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அந்த நிறுவனத்தின் சார்பாக தீர்ப்பளித்தால் மட்டுமே, அந்த நிறுவனம் தனது வங்கிக் கணக்கைக் தொடர முடியும்.

வங்கிகள் கணக்கை முடக்க முடியுமா?

உங்களுடைய வங்கிக் கணக்கில் நீங்கள் மேற்கொள்ளும் வங்கி நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தால் வங்கி, உங்கள் கணக்கை முடக்கி வைக்கலாம். ஆனால் அவ்வாறு முடக்கி வைப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட கணக்கு வைத்திருப்பவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Various reasons why banks freeze accounts | வங்கி கணக்குகள் முடக்கப்படும் காரணங்கள் என்னென்ன?

Freezing of accounts means you will not be able to undertake any transaction in your banking account until further notice. All payment and transactions will be stopped even cheques issued by the holder earlier. Regulators such as the Reserve Bank of India, Securities and Exchange Board of India, income-tax authorities or courts have rights to order a freeze bank accounts.
Story first published: Tuesday, April 23, 2013, 11:57 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns