புளூ சிப் ஸ்டாக்ஸ் என்றால் என்ன?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

புளூ சிப் ஸ்டாக்ஸ் என்றால் என்ன?
சென்னை: முதலீட்டாளர்களுக்கு நல்ல பொருள் வளமளிப்பதாக பல காலமாக நிரூபிக்கப்பட்டு வரும் மற்றும் சந்தை நிலவரத்தினால் பாதிக்கப்படாமல் தொடர்ந்து பல வருடங்களுக்கு பங்காதாயத் தொகை அறிவிக்கப்பட்டு வரும் நன்றாக இயங்கும் நிறுவனங்களின் பங்குகளே புளூ சிப் பங்குகள் என்று அழைக்கப்படுகின்றன.

இப்பங்குகள் உயர்ந்த தரம் மற்றும் வழக்கமாக அதிக விலை கொண்டவைகளாகத் திகழ்கின்றன. இதற்குக் காரணம் முதலீட்டாளர்கள் இப்பங்குகளை அளிக்கும் நிறுவனங்களின் மேல் கொண்டுள்ள அதீத நம்பிக்கையே ஆகும்.

இப்பங்குகள் முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகளை எட்டுவதற்கு மிகவும் உதவுகின்றன. புளூ சிப் நிறுவனங்கள் நிதி நிலையைப் பொறுத்த வரை மிகவும் வலிமையானவைகளாகவும், நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாகவும் கருதப்படுகின்றன.

இந்தியாவைப் பொறுத்த வரை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் பங்குகள் பெரும்பாலானவை புளூ சிப் பங்குகளாகும். லார்சன் அன்ட் டூப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐடிசி, பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்களின் பங்குகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவற்றுள் சில பங்குகள், மிக அதிக மூலதன மதிப்பைக் கொண்ட பங்குகளாகும். ஆனால் புளூ சிப் பங்குகளில் செய்யப்படும் முதலீடு எப்போதும் லாபம் ஈட்டித் தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are blue chip stocks? | புளூ சிப் ஸ்டாக்ஸ் என்றால் என்ன?

Stocks of well established companies with a long standing proven track record of generating investor wealth and those that have consistently declared dividends over the years, irrespective of market trend are blue chip stocks.
Story first published: Tuesday, April 30, 2013, 15:42 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns