மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் என்றால் என்ன?

மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் என்றால் என்ன?
சென்னை: மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் வைத்திருப்பவரின் விருப்பத்திற்கு ஏற்ப பங்குகளாக மாற்றத்தக்கது. பத்திரங்களை வைத்திருப்பவர் அந்த நிறுவனத்தின் பங்குகளாக முன்கூட்டியே குறிப்பிடப்பட்ட விலைக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். மாற்றத்தக்க கடன் பத்திரங்கள், பங்குகளுக்கும் கடன்பத்திரத்துக்கும் இடைப்பட்ட ஒரு கலப்பின பத்திரமாக இருக்கின்றன.

மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் பொதுவாக மற்ற கடன் பத்திரங்களைக் காட்டிலும் குறைவாகவே வட்டி ஈட்டுகின்றன. இதற்கு காரணம் இந்தப் பத்திரங்களின் மதிப்பு அடிப்படைப் பங்குகளின் மதிப்பைப் பொறுத்து ஏறுவதே ஆகும். இந்தப் பத்திரங்கள் பங்குச்சந்தை ஏறுமுகமாக இருக்கும்போது அதிக பலன் தரும். ஆனால் அடிப்படைப் பங்கு விலை ஏறாமல் இருந்தால் தான் இது நல்ல வட்டி தரும்.

மாற்று விகிதம்:

இந்த விகிதம்தான் பத்திரத்தை வைத்திருப்பவர், தான் மாற்றும் ஒவ்வொரு கடன் பாத்திரத்திற்கும் எவ்வளவு பங்குகள் பெறுவார் என்பதை தீர்மானிக்கும்.

நன்மைகள்:

கடன் பத்திரங்களை வெளியிடும் நிறுவனத்திற்கு கிடைக்கும் பலன் என்னவென்றால் பத்திரங்களை பங்குகளாக மாற்றும் போது அவர்களது கடன் பொறுப்புகள் குறைகிறது. முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பத்திரமான முதலீடாக இருக்கிறது. ஏனென்றால் சாதாரண பங்குகளில் முதலீடு செய்வதுடன் ஒப்பிடும்போது இந்த வகைப் பங்குகளின் மதிப்பு எளிதில் வீழ்ச்சி அடைவதில்லை.

குறைகள்:

மாற்றத்தக்க கடன் பத்திரங்களின் மிகப் பெரிய குறை என்னவென்றால் நிறுவனத்தின் பங்கு கையிருப்பைக் குறைத்து அதனால் நிறுவனத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு இது ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் சிறிய நிறுவனங்களுக்கு இதனால் நிச்சயம் பாதிப்பு உண்டாகும்.

முதலீட்டாளர்களுக்கும் இந்தப் பத்திரங்களால் குறைகள் உண்டாகலாம். ஏனென்றால் மற்ற பத்திரங்களோடு ஒப்பிடும்போது இந்த வகைப் பத்திரங்கள் முதிர்ச்சி அடையும் தருவாயில் குறைந்த வருமானத்தையே தருகின்றன. பத்திரத்தின் அடிப்படைப் பங்கு விலை ஏறுமுகமாக இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்த பிரச்சனை பொருட்படுத்த வேண்டியதாகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+