பணவீக்கக் குறியீட்டுடன் கூடிய பத்திரங்கள் என்றால் என்ன?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

தங்கத்தில் இருந்து மக்களை தள்ளி வைக்கும் சிதம்பரத்தின் பலே திட்டம்
சென்னை: மக்கள் தங்கம் வாங்குவதையும், தங்கத்தில் முதலீடு செய்வதையும் மாற்றுவதற்காக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் 2013ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பண வீக்கக் குறியீட்டோடு கூடிய கடன் பத்திரங்கள் மற்றும் பண வீக்கக் குறியீட்டோடு கூடிய தேசிய சேமிப்புப் பத்திரங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

இதுபோன்ற பத்திரங்களில் முதலின் மதிப்பு அப்படியே இருந்தாலும் கூப்பன் விகிதம் பண வீக்கத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.

இதன் அவசியம் என்ன?

பண வீக்கம் அதிகமாக இருக்கும் போது வட்டி விகிதம் குறைந்து வருமானம் வீழ்ச்சியடைகிறது. இதன் காரணமாகவே மக்கள் தங்கத்திலும் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்கின்றனர். பணவீக்கத்தோடு பிணைந்த பத்திரங்களை அறிவித்ததன் மூலம் ப.சிதம்பரம் முதலீட்டாளர்களை தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் இருந்து திசை திருப்புகிறார்.

மத்திய ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை செய்த பின் இந்த பத்திரங்கள் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று ப.சிதம்பரம் தெரிநித்துள்ளார். குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய தனியார் துறையின் பங்களிப்பு இதில் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பங்கள் தங்கத்தில் அல்லாது இது போன்ற பத்திரங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று சிதம்பரம் கூறுகிறார். தங்கம் பணவீக்கத்தில் இருந்து பாதுகாப்பதைப் போல இந்தப் பத்திரங்கள் தங்கத்தில் இருந்து பாதுகாப்பு தரும்.

இருப்பினும் தங்கத்தின் மீதான மோகம் அதிகமுள்ள இந்தியா போன்ற நாட்டில் இது எடுபடுமா? இதற்கான பதில் இந்தத் திட்டம் அறிவிக்கப்படும் முன் கணிக்க முடியாதது.

அரசு மக்களை ஊக்குவிக்க வரிச்சலுகைகள் அறிவித்தால் இந்தத் திட்டம் வெற்றியடையும். இல்லையேல் தனி முதலீட்டாளர்கள் தங்கத்துக்கே முன்னுரிமை தருவர். இருப்பினும் இத்திட்டத்தை பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் முன் நாம் எந்த முடிவுக்கும் வர இயலாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are inflation indexed bonds? | தங்கத்தில் இருந்து மக்களை தள்ளி வைக்கும் சிதம்பரத்தின் பலே திட்டம்

In a move to wean away households from either buying or investing in gold, Finance Minister P Chidambaram in the Union Budget 2013 announced the launch of an inflation indexed bonds or inflation-indexed National Security Certificates. In case of inflation indexed bonds, the coupon rate is likely to be linked to inflation and would move in tandem with inflation, while the principal would remain steady.
Story first published: Thursday, April 18, 2013, 17:08 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns