
( How LIC has played smart with the Infosys stock?)
இஎம்ஐ எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?
கடன் தொகை மற்றும் வட்டி தொகை கலந்து இருப்பது தான் மாதாந்திர தவணைத் தொகை. கடன் பெற்ற ஆரம்பத்தில் வட்டித் தொகை அதிகமாகவும், கடன் தொகை குறைவாகவும் கலந்து இருக்கும். மாதாந்திர தவணையை கணக்கிடும் முறையை இங்கே பார்ப்போம். மிகவும் எளிதான ஒரு கணக்கு தான்.
இ.எம்.ஐ = ( (கடன் தொகை X வட்டி) X (1+வட்டி) ^ மாதங்கள் )
----------------------------------------------------------------------------------------------
( (1+வட்டி)^ மாதங்கள் - 1 )
உதாரணமாக, நாம் பத்து லட்சம் ரூபாய், 11% வட்டி விகிதத்தில், 15 வருட கடன் காலத்துக்கு வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
கடன் தொகை = 10,00,000
வருட வட்டி விகிதம் = 11%
அப்போ ஒரு மாத வட்டி விகிதம் = 11/12 % =0.0091 %
ஆக மாத வட்டி = 0.91667%
விகிதத்தை(%) நீக்க 100 ஆல் வகுக்கவும்
ஆக மாத வட்டி = 0.91667 / 100 =0.0092
கடன் காலம் = 15 வருடம்
மாதக் கணக்கில் = 15 x 12 = 180 மாதங்கள்
சரி..இப்போது நம் ஃபார்முலா படி மாதாந்திர தவணையை கணக்கிடுவோம்.
இ.எம்.ஐ = (10,00,000 X 0.0091667) x (1+0.0091667) ^ 180
----------------------------------------------------
( (1+0.0091667) ^ 180- 1 )
= 9166.667 x 5.16829
------------------------
4.16823
= 47375.99
-----------
4.16823
இ.எம்.ஐ = 11,365.97
மாதாந்திர தவணை = ரூ. 11,365.97
நிரந்தர வட்டி விகிதம், ப்ளோட்டிங் வட்டி விகிதம் என வட்டி விகிதங்கள் இரண்டு வகைப்படும்.
நிரந்த வட்டி விகிதம்:
கடன் காலம் முழுவதும் ஒரு வட்டி நிர்ணையித்து, அதற்கேற்றார் போல மாதாந்திர தவணை கணக்கு செய்யப்படும். வட்டி விகிதம் மாறாத காரணத்தால் மாதாந்திர தவணையும் மாறாமல் இருப்பது தான் நிரந்தர வட்டி விகிதம். இனிவரும் காலங்களில் வட்டி விகிதம், இப்போது இருப்பதை விட உயரத்தான் செய்யும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நிரந்தர வட்டி விகிதத்திற்கு செல்வார்கள்.
ப்ளோட்டிங் வட்டி விகிதம்:
சந்தைக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடுகிறது. அதற்கேற்ப ஆர்.பி.ஐ வட்டி விகிதங்களை அவ்வப்போது மாற்றி அமைக்கிறது. இதனைத் தொடர்ந்து நாம் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதங்களும் மாறும். இதனால், நாம் செலுத்த வேண்டிய மாதாந்திரத் தவணையோ அல்லது கடன் செலுத்தும் காலமோ மாறலாம். இதனைத் தான் ப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பர்.
தேவையறிந்து கணக்கிட்டு, நமக்கு ஏற்ற மாதாந்திர தவணையை முடிவு செய்த பிறகு, கடன் வாங்குவது அனைவருக்கும் நல்லது!
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications