
(Should you buy gold after the 20% fall?)
2012 - 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில், இந்தியாவின் பிஸ்கல் டெபிசிட், இந்தியாவின் ஜிடிபியில் 5.1%மாக இருந்தது என்று அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதே பிஸ்கல் டெபிசிட் 5.3%மாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனெனில் வரிகள் மூலம் வரும் வருமானம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கிறது. ஆனால் இவ்வாறு பிஸ்கல் டெப்பாசிட் தொடர்ந்து அதிகரித்தால் அது பொருளாதார வளர்ச்சியை மிகவும் பாதிக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் பிஸ்கல் டெபிசிட் கணிசமான அளவில் அதிகரித்திருப்பதால், அது இந்தியாவின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் அது பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மானியங்களுக்காக இந்தியா அதிக அளவில் செலவிடுவதால், இந்தியாவின் பிஸ்கல் டெபிசிட் அதிகரிக்கிறது என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, எரிபொருள், உரம் மற்றும் உணவு ஆகியவற்றிற்கான மானியம் அதிகமாக இருக்கிறது. டீசல் விலையை அதிகரிப்பதன் மூலம் எரிபொருளுக்கான மானியத்தை இந்திய அரசு குறைக்கிறது. ஆனால் உணவு மற்றும் உரம் ஆகியவற்றிற்கான மானிய செலவை இந்திய அரசால் குறைக்க முடியவில்லை.
இந்த பற்றாக்குறையை குறைக்க இந்திய அரசு வரிகளைக் கூட்ட வேண்டும் அல்லது வருமானத்தை அதிகரிக்க வேண்டும். கார்ப்பரேட் துறையின் வளர்ச்சி கடந்த ஓராண்டு மந்தமாக இருப்பதால், நேரடி வரிகள் மூலம் வரும் வருமானம் குறைந்திருக்கிறது.
கடந்த 2012 - 13 நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவின் பிஸ்கல் டெபிசிட் ரூ.4.13 ட்ரில்லியனாக இருந்தது. வரும் ஆண்டுகளில் இந்த பிஸ்கல் டெபிசிட் கணிசமான அளவில் குறையும் என்று இந்திய நித அமைச்சர் திரு. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். அதாவது இந்திய ஜிடிபியில் பிஸ்கல் டெபிசிட்டை 4.8 சதவீதமாக குறைக்க முடிவெடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications