அதென்ன ஃபார்ம் 16, ஃபார்ம் 16ஏ?

அதென்ன ஃபார்ம் 16, ஃபார்ம் 16ஏ?
சென்னை: என்னய்யா இது படிவம் 16ன்னு ஒண்ணு இருக்கு படிவம் 16 ஏ-ன்னு ஒண்ணு இருக்கு. நம்மில் பலருக்கு ஏற்படும் சந்தேகம் இது தான்.

படிவம் 16 (ஃபார்ம் 16):

படிவம் 16 என்பது மாத சம்பளம் வாங்கும் நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். நாம் வேலை செய்யும் நிறுவனம், நமக்கு வழங்கும் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வரிக்காக பிடித்தம் செய்து மிச்ச தொகையைத் தருவார்கள். இவ்வாறு வருவாயில் இருந்து வரிக்காக பிடித்தம் செய்வதை டிடிஎஸ் (TDS) என்பர்.

இவ்வாறு பிடித்தம் செய்த விளக்கங்கள் மற்றும் நம் ஊதியம் தொடர்பான விவரங்களை கொண்ட ஒரு பத்திரம் தான் படிவம் 16. பொதுவாக ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும், நிறுவனங்கள் தாங்கள் பிடித்தம் செய்த வரியை அரசுக்கு செலுத்திய பிறகு படிவம் 16ஐ ஊழியர்களுக்கு வழங்கும். இந்த படிவம் 16ஐ வைத்து தான், நம்முடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும். ஆகையால் இது மிக முக்கியமான பத்திரம்.

ஒரு சிலர் ஒரு நிதி ஆண்டில், இரண்டு நிறுவனங்களில் வேலை செய்திருப்பார்கள். அவ்வாறிருந்தால், இரு நிறுவனங்களிடமும் தனித் தனியே படிவம் 16 பெற்று, வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். வரியை பிடித்தம் செய்யாத பட்சத்தில், நிறுவனங்கள் படிவம் 16 கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

படிவம் 16 ஏ (ஃபார்ம் 16A):

படிவம் 16ஏ என்பது நிறுவன ஊழியர்கள் அல்லாத மாதச் சம்பளம் வாங்காதவர்கள் பயன்படுத்தக்கூடிய பத்திரம். பொதுவாக கன்சல்டன்ட்ஸ் அல்லது ஒரு குறிப்பிட்ட சேவைக்காக நிறுவனங்களுக்கு துணை புரிபவர்கள் போன்றோர் இவ்வகையில் அடக்கம். இவர்கள் வருமான வரியை தாக்கல் செய்வது என்பது கிட்டத்தட்ட ஒரு சிறிய நிறுவனம் தாக்கல் செய்வது போல தான். லாப, நஷ்ட கணக்குகள் மற்றும் இதர செலவுகளைக் கொண்டு தான் வரித் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

இதே போல, வங்கிகளில் நாம் வைத்திருக்கும் வைப்புத் தொகைகளுக்காக நாம் பெறும் வட்டிக்கும் இது பொருந்தும். வட்டிக்கான வரிகளை பிடித்தம் செய்து வங்கிகள் டிடிஎஸ் சான்றிதழ் வழங்குகின்றன. ரூ 10,000க்கும் மேல் வட்டி பெறுபவர்களுக்கு வங்கிகள் இந்தச் சான்றிதழை வழங்குகின்றன. இதுமட்டுமல்லாமல் பங்கு வர்த்தக வருமானம், லாட்டரி, குதிரைப் பந்தயம் போன்றவற்றில் பெற்ற வருமானம், தொழில் மற்றும் தொழில்நுட்ப சேவைகளில் பெற்ற வருமானம் போன்றவைகளும் படிவம் 16 ஏ-வில் அடங்கும்.

ஆக மொத்தம், படிவம் 16 அல்லது படிவம் 16ஏ பெற்று, அவர் அவர்களுக்கு ஏற்றார் போல, சரியான நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்வது நம் நாட்டுக்கு செய்யும் கடமை. அதுமட்டுமல்ல எந்த வங்கியில் கடன் கேட்டாலும், அவர்கள் கேட்கும் முக்கிய ஆவணம் இந்த படிவம் 16 தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+