செக்யூரிட்டீஸ் ட்ரான்ஸாக்ஷன் வரி அல்லது எஸ்டிடி என்றால் என்ன?

பங்குகளை வாங்கினால், விற்றால் எஸ்டிடி கட்டணும், தெரியும்ல?
சென்னை: செக்யூரிட்டீஸ் ட்ரான்ஸாக்ஷன் வரி அல்லது எஸ்டிடி என்பது பங்குகள், டெரிவேட்டிவ்கள் மற்றும் மியூச்சல் ஃபண்ட் ஆகியவற்றை வாங்கும் போதும், விற்கும் போதும் விதிக்கப்படும் வரியாகும்.

உதாரணமாக நீங்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அவற்றை வாங்க செலுத்தும் தொகையில் சேவை வரி, கல்வித் தீர்வை கட்டணங்களோடு, எஸ்டிடியும் சேர்க்கப்படுகிறது.

அதே போல் நீங்கள் பங்குகளை விற்கும்போது, உங்கள் பங்குகளின் மதிப்பைப் பொறுத்து, தரகரோ அல்லது ஏஎம்சி-யோ எஸ்டிடி-யை பிடித்தம் செய்து கொள்வர். செக்யூரிட்டி ட்ரான்ஸாக்ஷன்கள் ஆரம்ப நிலையிலேயே வரி விதிப்புக்குள்ளாவதால் முதலீட்டாளர்கள், மூலதன லாப வரியிலிருந்து தப்பிக்க இயலாது. சந்தைக்கப்பாற்பட்ட ட்ரான்ஸாக்ஷன்களுக்கு எஸ்டிடி பொருந்தாது.

எவ்வளவு செக்யூரிட்டீஸ் ட்ரான்ஸாக்ஷன் வரி விதிக்கப்படுகிறது?

பங்குகள் அல்லது ஈக்விட்டி ஓரியன்டட் மியூச்சல் ஃபண்ட்களை வாங்கும் போது அல்லது விற்கும் போது எஸ்டிடி வரி விகிதம், அம்மொத்த ட்ரான்ஸாக்ஷன் மதிப்பிலிருந்து சுமார் 0.125 சதவீதம் வரியாக கணக்கிடப்படும். ஆனால், டெரிவேட்டிவ்களைப் பொறுத்த வரை சுமார் 0.017 சதவீதம் வரி விற்பவர் மீது மட்டும் சுமத்தப்படும்.

என்ன செய்யலாம்?

ஒரு ஆண்டின் முடிவில் அவ்வாண்டு முழுக்க நீங்கள் செலுத்திய எஸ்டிடி-க்கான சான்றிதழை தரும்படி உங்கள் தரகரைக் கேட்கலாம். இத்தொகையை உங்கள் குறைந்த கால மூலதன லாபத்திலிருந்து பிடித்துக் கொள்ளும்படி செய்வதன் மூலம் வரியைக் குறைக்கலாம்.

எஸ்டிடி, பின் வரும் தன்மையில் அமைந்த செக்யூரிட்டிகளுக்கு விதிக்கப்படுகின்றது:

• இன்கார்ப்பரேட்டெட் அல்லது பாடி கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகள், ஸ்க்ரிப்ஸ், ஸ்டாக்குகள், ஒப்பந்தங்கள், கடனீட்டு ஆவணங்கள், டெபெஞ்ச்சர் ஸ்டாக்குகள், அல்லது வேறு ஏதேனும் சந்தைப்படுத்தக் கூடிய இதே போன்ற தன்மை வாய்ந்த செக்யூரிட்டிகள்
• டெரிவேட்டிவ்கள்
• கூட்டு முதலீட்டுத் திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் பங்குகள் அல்லது வேறு ஏதேனும் திட்டங்கள்
• செக்யூரிட்டைசேஷன் அன்ட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் ஆஃப் ஃபினான்ஷியல் அஸ்செட்ஸ் அன்ட் என்ஃபோர்ஸ்மென்ட் ஆஃப் செக்யூரிட்டி இன்டரஸ்ட் ஆக்ட் 2002 என்ற சட்டத்தின் 2(இசட்ஜி) பிரிவின் கீழ் விளக்கப்பட்டுள்ளதைப் போன்ற செக்யூரிட்டி ரசீது
• சம பங்கு தன்மை கொண்ட அரசு செக்யூரிட்டிகள்
• மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட இதே போன்ற வேறு திட்டங்கள்
• செக்யூரிட்டிகளில் உள்ள உரிமைகள் அல்லது ஆதாயம்
• சம பங்கு அடிப்படையில் அமைந்த மியூச்சுவல் ஃபண்ட்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+