வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் எது?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் எது?
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31ம் தேதி ஆகும்.

2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீங்கள் ஈட்டிய வருமானத்திற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் ஜூலை 31ம் தேதி ஆகும்.

ஒருவேளை வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் நீட்டிக்கப்பட்டால் அதை வருமான வரித்துறை தெரியப்படுத்தும். எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கடைசி தேதி ஆகஸ்ட 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதாவது ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் அபராதம் கிடையாது.

வருமான வரித் துறை முடிவு செய்திருக்கும் தொகையைவிட உங்கள் வருமானம் அதிகமாக இருந்தால் அதற்கு நீங்கள் வரிமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக வருடத்திற்கு ரூ.10 லட்சம் வருமானம் பெறுவோர் கண்டிப்பாக ஆன்லைனில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது இந்து கூட்டு குடும்பமோ வருமான வரித் துறை நிர்ணயம் செய்திருக்கும் ரூ.10 லட்சத்தைவிட அதிகமாக 2012-2013ம் ஆண்டில் வருமானம் பெற்றிருந்தால் அவர்கள் கண்டிப்பாக இ-பைலிங் செய்ய வேண்டும் என்று வருமான வரித் துறை ஆணை பிறப்பித்திருக்கிறது.

எனவே நீங்கள் வருமான வரியை தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்களை தயார் செய்து வைத்திருப்பது மிகவும் நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the last date for filing income tax returns? | வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் எது?

The last date for filing income tax returns for any assessment year is normally 31st July. So, to file your income tax returns for all income accrued from 1st April 2012 to 31st March 2013, the deadline would be July 31, 2013. It would be called assessment year 2013-2014. Sometimes the department notifies if the date has been extended. For example, during the last year the date was extended to August 31st. This means that no penalties would be payable for late filing.
Story first published: Tuesday, April 23, 2013, 14:51 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns