
வெர்ச்சுவல் டிரேடிங் என்றால் என்ன?
வெர்ச்சுவல் டிரேடிங் என்றால் பங்குச் சந்தையில் இருக்கும் ஒரு தனித்துவமான ப்ரோக்ராம் ஆகும். இந்த ப்ரோக்ராம் பங்குச் சந்தையில் உள்ள நெளிவு சுழிவுகளைக் கற்றுத் தருகிறது. நாம் நம் கையில் இருந்து பணத்தை போடாமல் வெர்ச்சுவல் பணத்தை வைத்து வர்த்தகம் செய்வது. இந்த ப்ரோகிராம் பங்குச் சந்தையின் டூப்ளிக்கேட் நேரடி வர்த்தகத்தை நமது கம்யூட்டரில் வழங்குகிறது. இதன் மூலம் ஒரு முதலீட்டாளர் சிரமம் இல்லாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவோ அல்லது பங்குகளைப் பரிமாற்றம் செய்யவோ முடியும்.
வெர்ச்சுவல் டிரேடிங் நன்மைகள்
இந்த வெர்ச்சுவல் டிரேடிங்கில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இந்த வெர்ச்சுவல் டிரேடிங் ஒருவரை பங்குச் சந்தையில் ஒரு சிறந்த முதலீட்டாளராக மாற்றிவிடும்.
களப்பயிற்சி அளிக்கும் வெர்ச்சுவல் டிரேடிங்
இந்த வெர்ச்சுவல் டிரேடிங் பங்குச் சந்தையின் நேரடி வர்த்தகத்தை ஒத்த ஒரு ப்ரோகிராமை வழங்கும். அதன் மூலம் நீங்கள் உங்களின் பங்குச் சந்தை நடவடிக்கைகளை மிக எளிதாக ஒப்பிட்டு பார்க்க முடியும். பங்குச் சந்தையில் உள்ள அடிப்படையான அணுகுமுறைகள், யுத்திகள்போன்றவற்றை இந்த ப்ரோகிராம் மூலம் கற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் ஒருசில அடிப்படையான சோதனைகளையும் செய்து பார்க்க முடியும்.
ரிஸ்க் ஃப்ரீ
பணத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம் இந்த ப்ரோக்ராமில் இல்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட வெர்ச்சுவல் தொகையை ஒதுக்கி அந்த தொகையை வைத்து நீங்கள் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
இந்த வெர்ச்சுவல் டிரேடிங் பங்குச் சந்தையின் நடவடிக்கைகளைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. இதன் மூலம் பங்குகளின் பரிவர்த்தனைகள், பங்குகளின் விலை மற்றும் உலக பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
பங்குச் சந்தையில் புதியவர்களுக்கு பாடம் நடத்தும் வெர்ச்சுவல் ட்ரேடிங்
ஒருவர் பங்கு வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பாக இந்த வெர்ச்சுவல் டிரேடிங்கில் ஒரு வருடமாவது ஈடுபட்டிருந்தால் அவர் பங்குச் சந்தையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். அந்த ஒரு வருடத்தில் பங்கு வர்த்தகத்தில் ஏற்படும் சுழற்சி, ஏற்றம் மற்றும் இறக்கம் ஆகிய அனைத்தையும் அவர் தெரிந்துகொள்ள முடியும். அதோடு அவரை இந்த ப்ரோக்ராம் ஒரு சிறந்த முதலீட்டாளராக மாற்றும். குறிப்பாக புதியவர்களைவிட பங்கு வர்த்தகத்தில் தொழில் ரீதியாக ஈடுபடுபவர்கள்தான் அதிகமான அளவில் இந்த வெர்ச்சுவல் டிரேடிங்கில் ஈடுபடுகின்றனர்.
உங்கள் கவனத்திற்கு
இந்த வெர்ச்சுவல் டிரேடிங், பங்கு வர்த்தகத்தில் புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு ஒரு பயிற்சியாளராக இருக்கும் என்பது உண்மையே. ஆனால் இந்த வெர்ச்சுவல் டிரேடிங் உண்மையான மனித பயிற்சியாளரை ஈடு செய்ய முடியாது. ஒரு சில நேரங்களில் இந்த ப்ரோக்ராம் தவறான தகவல்களையும் தர வாய்ப்பிருக்கிறது. அதாவது பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் மிகப் பெரியத் தொகையை அள்ளிவிடலாம் என்ற தவறான தகவலையும் தர வாய்ப்பிருக்கிறது. இந்த வெர்ச்சுவல் டிரேடிங் மிகவும் முக்கியமானது. அதே நேரத்தில் ஒரு பயிற்சியாளரையும் நீங்கள் வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.
More From GoodReturns

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications