டிவிடென்ட் வழங்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிவிடென்ட் வழங்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்
சென்னை: ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு அந்த நிறுவனம் தனது வருமானத்திலிருந்து வழங்கும் தொகையே ஈவுத் தொகை(டிவிடென்ட்) ஆகும். அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தால், நீங்கள் வாங்கியிருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் அந்த நிறுவனத்தின் வருமானத்திலிருந்து ஒரு சிறிய தொகையை அந்த நிறுவனம் வழங்கும்.

 

பொதுவாக அதிகமான லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வாங்கியவர்களுக்கு முறையாக, சீரான இடைவெளியில் இந்த ஈவுத் தொகையை வழங்குகின்றன. அதன் மூலம் அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கியவர்களுக்கு அது ஒரு நிரந்தர வருவாயாகவும் இருக்கும்.

டிவிடென்ட் பேஅவுட் ரேஷியோ

பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறை ஈவுத் தொகை வழங்கப்படும். எனினும் நிறுவனங்கள் தாங்கள் பெறும் லாபத்தைப் பொறுத்து ஈவுத் தொகை மற்றும் அவற்றை வழங்கும் முறையை முடிவு செய்கின்றன. குறிப்பாக ஈவுத் தொகையை அடிக்கடி வழங்கும் நிறுவனங்கள் வலுவான நிதி ஆதாரத்துடன் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.

டிவிடென்ட் பேஅவுட் ரேஷியோ என்றால் ஈவுத் தொகையை பகிர்ந்தளித்ததற்கான லாபத்தின் விகிதம் ஆகும். பேஅவுட் ரேஷியோ அதிகமாக இருந்தால், லாபத்திலிருந்து அதிகமான தொகை ஈவுத் தொகையாக வழங்கப்படுகிறது என்று பொருள்.

டிவிடென்ட் ஈல்டு

டிவிடென்ட் ஈல்டு என்றால், ஒவ்வொரு பங்கிற்கும் உள்ள ஈவுத் தொகைக்கும், தற்போதைய பங்கு சந்தையில் பங்குகளின் மதிப்பிற்கும் இடையே உள்ள உறவு ஆகும். டிவிடென்ட் ஈல்டை தெரிந்து வைத்து பங்குகளில் முதலீடு செய்தால்தான் அது முதலீட்டாளர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

டிவிடென்ட் ஈல்டு ரேஷியோ = ஒரு பங்குக்கான டிவிடென்ட்/பங்குச் சந்தையில் ஒரு பங்குக்கான மதிப்பு

எடுத்துக்காட்டாக அலகாபாத் வங்கி ஒரு பங்கை ரூ.120க்கு விற்கிறது. ஒவ்வொரு பங்கிற்கும் 60 சதவீதம் டிவிடென்டை அதாவது அதன் பேஸ் மதிப்பின்படி ரூ.10 வழங்குவதாக கூறுகிறது. எனவே நீங்கள் இதில் 100 பங்குகளை வாங்கினால் நீங்கள் ரூ.12,000 முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலம் ஆண்டுக்கு இந்த தொகைக்கு 60 சதவீத டிவிடென்ட் அதாவது ரூ.600 டிவிடன்ட் தொகையாகப் பெறுவீர்கள். இதில் டிவிடென்ட் ஈல்டு 5% ஆகும்.

அறிவிப்பு

நிறுவனத்தின் போர்டு ஆப் டைரக்டர்கள் டிவிடென்ட்டையும், டிவிடென்ட் தொகை வழங்கப்படும் தேதியையும் அறிவிப்பார்கள்.

எக்ஸ் டிவிடென்ட் தேதி

எக்ஸ் டிவிடென்ட் தேதிக்கு முன்பாக ஒருவர் பங்குகளை வைத்திராவிட்டால், அவருக்கு டிவிடென்ட் தொகை வழங்கப்பட மாட்டாது. எனவே பங்குகளை வாங்குவதற்கு முன் எக்ஸ் டிவிடென்ட் தேதியைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

பேமென்ட் தேதி

பேமென்ட் தேதி என்றால் பங்குகளை வாங்கியவர்களுக்கு அந்த நிறுவனம் டிவிடென்ட் தொகையை வழங்கும் தேதியாகும்.

புக் குளோசிங் தேதி

புக் குளோசிங் தேதி என்றால், பங்குகளை வாங்குபவர், இந்த தேதிக்கு முன்பாக தான் பங்குகளின் உரிமையாளர் என்பதைப் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர் இந்த டிவிடென்ட் தொகைய பெற தகுதியுடையவராவார். பொதுவாக பதிவு செய்ய இரண்டு அல்லது 3 வேலை நாள்கள் தேவைப்படும்.

டிவிடென்ட் தொகைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை

 

பங்குகளிலிருந்து பெறும் டிவிடென்ட் தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை.

ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பாக அந்த நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளை சரி செய்து பார்த்த பின்பு முதலீடு செய்வது நல்லது. மேலும் பல நிறுவனங்கள் வழங்கும் டிவிடென்ட் தொகையை ஒப்பிட்டுப் பார்ப்பதும் நல்லது. அதன் மூலம் அதிகமான டிவிடென்ட் தொகையைப் பெற வாய்ப்பு இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What you need to know about dividend paying companies? | டிவிடென்ட் வழங்கும் நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்

Dividends are part of a company's earning which are paid out to shareholders of the company. This means if you own a share, you are paid a portion of the company's earnings for each share held by you, provided the company makes a profit and the board agrees and recommends a dividend. Sound profit making companies generally have a long standing track record of dividend distribution, which makes for stable income when compared to others.
Story first published: Tuesday, April 2, 2013, 15:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X