
போர்ட்ஃபோலியோவை ஆராயவும்:
திட்டத்திற்கான போர்ட்ஃபோலியோவில் பங்குகள் ஏதேனும் சமீபமாக வரக்கூடிய தவணையில் பயனற்றதாகவோ அல்லது நன்றாக செயல்பட முடியாத நிலையிலோ உள்ளதா என்பதை விரைவாக ஆராயுங்கள். உதாரணமாக, அத்திட்டம் இன்ஃப்ரா மற்றும் உலோகப் பங்குகளில் அதிகமாக முடங்கி இருந்தால் குறுகிய காலத்தில் நீங்கள் அதிலிருந்து லாபம் சம்பாதிக்க முடியாது. ஏனெனில் இத்தொழில்கள் தற்போது முதலீட்டாளர்களின் விருப்பத்துக்கு உகந்தவையாக இல்லை.
நியாயமான லாபத்தை பெற்றிருப்பின் திட்டத்தை மாற்றலாம்:
உங்கள் திட்டம் தொடர்ந்து நல்ல லாபத்தை கொடுத்திருந்தால் கூடிய விரைவில் அது சராசரிகளின் விதிக்குட்படும் சாத்தியம் நிறைய உள்ளது. அதனால் நல்ல மதிப்பீடுடன் இருக்கும் வேறு ஒரு புது திட்டத்திற்கு மாறலாம்.
சந்தைகள் எழுச்சியடைந்தால், பங்குகளை விற்று லாபம் ஈட்டுவது சிறந்தது:
சந்தைகள் எழுச்சியடையும்போது திட்டங்களிலிருந்து வெளியேறி உங்கள் போர்ட்ஃபோலியோவிலிருந்து ஒரு பகுதியை மட்டுமாவது விற்று பணம் ஈட்டுவது சிறந்தது. மிச்சமுள்ள 50 சதவீதப் பங்குகளை அத்திட்டத்திலேயே தொடரலாம்.
வட்டி விகிதங்கள் சரியும் போது, கடன் திட்டங்களிலேயே தொடரலாம்:
வட்டி விகிதங்கள் சரியக்கூடும் என்று நீங்கள் எண்ணினால் நீண்ட கால கடன் திட்டங்களிலேயே தொடரலாம். உதாரணமாக ஆர்பிஐ, தன் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வருடம், குறைந்த பட்சம் 75 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கு ஆர்பிஐ-யின் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம்.
இந்நிலையில் கடன் திட்டங்களிலேயே தொடர்வது நலம். ஏனெனில், இம்மாதிரியான சரியும் வட்டி விகித சூழலில் கடன் திட்டங்களில் தான் நல்ல லாபம் கிடைக்கும்.
எந்நிலையிலும், முதலீட்டாள, தன் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து கண்காணிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். மேலும், தன் போர்ட்ஃபோலியோவை ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறையாவது திருப்பி சரி பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications