பங்கு வர்த்தகமா, ரியல் எஸ்டேட்டா, எதில் முதலீடு செய்யலாம்?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

இன்றைய சூழலில் பணத்தை பங்கில் போடுவதா, ரியல் எஸ்டேட்டிலா?
சென்னை: பணம் அதிகம் வைத்திருப்பவர்கள் அல்லது அதிக வருமானம் பெறுபவர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அதுவும் குறிப்பாக பங்கு வர்த்தகத்திலா அல்லது ரியல் எஸ்டேட்டிலா என்று வரும்போது சற்று குழப்பமடைந்து விடுகின்றனர். இந்த இரண்டு துறைகளுமே தங்களுக்கே உரிய நன்மைகளையும் அதே நேரத்தில் பலவீனங்களையும் கொண்டுள்ளன.

தற்போதைய இந்திய சூழ்நிலையில் முதலீடு செய்ய இந்த இரண்டில் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பது என்பது சற்று சிரமமான காரியமே. ஏனெனில் தற்போது ரியல் எஸ்டேட் துறை மிகவும் பலவீனமாக உள்ளது. மேலும் கட்டிட பொருள்களின் விலையும் மாறாமல் இருக்கிறது.

மாறுபாட்ட தன்மை உள்ள முதலீட்டு பணம்

பங்கு வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்படும் பணத்தின் தன்மை மாறுபாடு கொண்டது. எனவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தனது சொத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்து முதலீடு செய்யும் ஒருவர் இந்த இரண்டில் ஒரு துறையைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்படும் பணமும், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்படும் பணமும் மாறுபாடுபாடு கொண்டவை. அவற்றிலிருந்து வரும் லாபம் மற்றும் நட்டம் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறுபட்டு இருக்கும்.

குறிப்பாக பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்படும் பணம், முதலீடு செய்பவரின் தன்மை, ஆர்வம் மற்றும் அவர் முதலீடு செய்யும் அளவு ஆகியவற்றிற்கு ஏற்ப அதிகரிக்கும் அல்லது குறையும். ஆனால் இந்த நெகிழ்வு தன்மை ரியல் எஸ்டேட் துறையில் இருக்காது.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு 2 பெட்ரூம் பிளாட்டை ரூ.45 லட்சத்துக்கு வாங்கத் தீர்மானம் செய்கிறீர்கள். அந்த பிளாட் இருக்கும் இடம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றைக் கணக்கிட்டு இன்னும் ஓராண்டில் அதை ரூ.60 லட்சத்திற்கு விற்கலாம் என்று முடிவு செய்கிறீர்கள். ஆனால் அந்த பிளாட்டை வாங்க முதலில் நீங்கள் ரூ.45 லட்சம் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டும். ஆனால் பங்கு வர்த்தகத்தில் அவ்வாறு மிகப் பெரிய தொகைய நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.

எதில் முதலீடு செய்வது என்பதில் உறுதியாக இருங்கள்

நீங்கள் மிகப் பெரிய தொகையை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் நீங்கள் சொத்துக்களில் அந்த தொகையை முதலீடு செய்ய முடிவு எடுக்கிறீர்கள். அவ்வாறு முடிவு எடுக்கும் போது, அந்த சொத்துக்களில் இருந்து நல்ல லாபம் கிடைக்குமா என்று பாருங்கள்.

குறைந்த தொகையை நீங்கள் வைத்திருந்தால் அதை நீங்கள் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் பங்கு வர்த்தகத்தில் இருந்து லாபம் பெற நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

உங்கள் முதலீடு உடனே செயல்பாட்டில் இருக்க வேண்டும் அல்லது நீங்கள் நினைக்கும்போது உங்கள் முதலீட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம். குறிப்பாக வெள்ளைப் பணம் வைத்திருப்போர், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதைவிட பங்கு வர்த்தகத்தில்தான் அதிகம் முதலீடு செய்கின்றனர்.

ஆனால் நடைமுறையில் கருப்பு பணமும், கருப்புப் பணத்திற்கான தேவையும் அதிகம் இருக்கின்றன. அதனால்தான் பணநடவடிக்கைகள் பெரும்பாலும் மறைமுகமாக நடைபெறுகின்றன. எனவே உண்மையான முதலீட்டாளரை அடையாளம் காணுவது மிகவும் அரிது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Where to Invest - Equity or Real Estate? | இன்றைய சூழலில் பணத்தை பங்கில் போடுவதா, ரியல் எஸ்டேட்டிலா?

Holders of spare cash or an extra income are often confused about which segment to pick up when it comes to Real Estate and Equities. Both have its own set of merits and demerits. Current environment in India is such that it is a difficult choice between the two.
Story first published: Friday, April 26, 2013, 16:20 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns