
சலூன் கடைக்காரரிடம் சிட்பண்ட் பயனுள்ளதாக இருக்கிறதா என்று கேட்டேன். அவரும் பயனுள்ளதாக இருக்கிறது என்று பதிலளித்தார். மேலும் பணத்தை சேமிப்பதற்கு இந்த சிட்பண்ட் மிகவும் உதவியாக இருக்கிறதென்றும், மிகப் பெரிய தொகை அவசரமாகத் தேவைப்படும் போது இந்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு சாதாரண மனிதர்களில் பலர் தங்கள் வீட்டில் நடக்கும் திருமணங்கள் மற்றும் இதர குடும்ப வைபவங்களுக்கு தேவையான பணத்தை இந்த சிட்பண்டில்தான் சேமித்து வைக்கின்றனர். சமீபத்தில் சாரதா குரூப் சிட்பண்ட் தனது நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவிட்டது. அதனால் இந்தியாவில் உள்ள மொத்த சிட்பண்டுகளை ஒழிக்க வேண்டும் என்று பலர் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
ஆனால் இந்த கருத்தை நான் முழுமையாக மறுக்கிறேன். சமீபத்தில் சட்டத்திற்கு புறம்பாக பணத்தைப் பெற்றதாக, இந்தியாவில் இருக்கும் மிக முக்கிய 3 தனியார் வங்கிகள் மீது புகார்கள் வந்தன. ஆனால் இந்த வங்கிகளை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் அவ்வாறு அந்த வங்கிகள் சட்டத்திற்கு புறம்பாக பணத்தைப் பெற்றிருந்தால் அது வங்கி நடவடிக்கைகளிலும், பங்கு சந்தையிலும் எதிரொலித்திருக்கும். மேலும் இந்த வங்கிகளை மூட முடியாது. அவற்றில் பல பிரச்சினைகள் உள்ளன.
ஒரு கூடையில் உள்ள ஆப்பிள்களில் ஒரு ஆப்பிள் அழுகிவிட்டது என்பதற்காக அனைத்து ஆப்பிள்களும் அழுகிவிட்டன என்று கூற முடியாது. உடனே அனைத்து ஆப்பிள்களையும் நாம் குப்பையில் கொட்டுவதில்லை. அதுபோல்தான் ஒரு சிட்பண்ட் நிறுவனம் திவாலாகிவிட்டது என்பதற்காக அனைத்து சிட்பண்ட் நிறுவனங்களையும் மூட முடியாது, மூடவும் கூடாது.
சிட்பண்ட் ஏன் தேவை?
முடி திருத்துபவர்கள், மெக்கானிக்குகள், பெட்டிக்கடை நடத்துபவர்கள் போன்ற சாதாரண மக்கள் இந்த சிட்பண்டுகளில்தான் தங்கள் பணத்தைச் சேமித்து வைக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி கற்றிருக்கமாட்டார்கள். மேலும் இவர்களுக்கு வங்கிகள் வழங்கும் ரெக்கரிங் டெப்பாசிட்டைப் பற்றியெல்லாம் தெரியாது. அதனால் அவர்கள் தங்கள் சேமிப்புக்கு சிட்பண்டையே நம்பி இருக்கின்றனர்.
மேலும் சிட்பண்டுகள் அரசாங்கத்தால் முறைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கேரளாவில் 1975 ஆம் ஆண்டு கேரளா சிட்டீஸ் சட்டம் அங்குள்ள சிட்பண்டுகளை நெறிப்படுத்துகிறது. கர்நாடகாவில் 1983 ஆம் ஆண்டு சிட்பண்ட் சட்டம் சிட்பண்டுகளை நெறிப்படுத்துகிறது. அதுபோல் ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் புதுடெல்லி போன்ற மாநிலங்களிலும் சிட்பண்டுகள் சட்டத்திற்குட்பட்டே நடைபெறுகின்றன.
கேரளாவில், அரசு நிறுவனமான கேரள ஸ்டேட் பைனான்ஷியல் என்டர்பிரைசஸ் லிமிடெட் சிட்பண்டை நடத்தி வருகிறது. தற்போது ஸ்ரீராம் சிட்ஸ் போன்ற நிறுவனங்கள் பல ஆண்டுகளாக சிட்பண்டை நடத்தி வருகின்றன.
குறிப்பாக கேரளாவில் மட்டும் சுமார் 5000 சிட்பண்டுகள் சட்டங்களுக்குட்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. நம்முடைய இந்தியாவில் உள்ள சாதாரண மக்கள், வங்கிகளின் நன்மைகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வரையிலும் அவர்கள் தங்கள் சேமிப்பிற்கு இந்த எளிய மற்றும் இலகுவான சிட்பண்டுகளைத் தான் நம்பி இருப்பார்கள்.
எனவே இந்த நேரத்தில் உடனடியாக சிட்பண்டுகளை தடை செய்யக் கூடாது. மாறாக சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் நடந்த ஊழல்களைக் கண்டுபிடித்து அவற்றைக் களைய முயற்சிக்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications