வங்கி கணக்குகளுக்கு நாமினி ஏன் அவசியம்?

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கி கணக்குகளுக்கு நாமினி ஏன் அவசியம்?
சென்னை: வங்கி கணக்குகள் மற்றும் வைப்புத் தொகை திட்டங்களுக்கான படிவங்கள் அனைத்திலும் நாமினி நியமனம் என்பது கட்டாயமாக நிரப்ப வேண்டிய ஒன்றாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நாமினி நியமனம் என்று ஒன்று இருந்தால், வங்கிகள் இறந்தவரின் கணக்கில் உள்ள மீதித் தொகையை நாமினிக்கு எளிதாக வழங்கலாம்.

 

(When can you withdraw your provident fund?)

நாமினி இருந்தால் மரபுரிமை சான்றிதழோ அல்லது சட்டப்பூர்வமான நாமினி என்று உறுதி செய்து கொள்வதற்கான வேறு எந்த ஆவணங்களோ சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கிகள் நிர்ப்பந்திக்காது. ஆனால் இறப்புச் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நாமினி நியமன வசதி என்பது இறந்து போன வைப்புத் தொகையாளர்க்குப் பின் யாருக்கு வட்டித் தவணை செல்ல வேண்டும் என்று தெளிவுபடுத்தி விடுவதால், வங்கிகள் அன்னாரின் நிதி உடமைகளை தீர்வு செய்யும் முறை எளிதாகிறது.

எனினும் வங்கிக் கணக்கு, வைப்புத் தொகை அல்லது பெட்டகத்துக்காக ஆவன செய்யும்போது, நாமினி நியமனத் தகவலை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று வங்கிகள் நிர்ப்பந்திப்பது இல்லை. அதனால் வாடிக்கயாளர்கள், நியமன படிவத்தை கேட்டு வாங்கி நிரப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் வைப்புத் தொகை அல்லது வங்கி கணக்குக்கு நியமனம் செய்யப்பட்ட நாமினிக்கு எளிதாக இருக்கும்.

நாமினி நியமனப் படிவத்தை நிரப்பி அதனை வங்கியில் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் நாமினியை எளிதாக நியமனம் செய்யலாம். உங்கள் நாமினியாக உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான யாரும் - உங்கள் குடும்ப உறுப்பினரோ, உறவினரோ அல்லது நண்பரோ - இருக்கலாம்.

ஒருவர், வயது வராத நபரைக் கூட தன் நாமினியாக நியமிக்கலாம்; ஆனால் அந்த நாமினியின் சார்பாக அவரது பாதுகாவலர் கையெழுத்திட வேண்டும். மேலும், நாமினியின் பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றோடு அப்பாதுகாவலரின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியனவும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நாமினி இருக்கும் பட்சத்தில்:

இறந்தவரின் நிலுவைத்தொகை, நியமிக்கப்பட்ட நாமினியின் அடையாளங்கள் (தேர்தல் வாக்களர் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் போன்றவை) மற்றும் வைப்புத் தொகையாளர் இறந்ததற்கான சான்று ஆகியவற்றை நிச்சயப்படுத்திக் கொண்ட பின் அந்த நாமினிக்கு வழங்கப்பட வேண்டும்.

நாமினி இல்லாத பட்சத்தில்:

இறந்தவரின் நிலுவைத்தொகை, சட்டப்பூர்வமான நாமினிகளின் (அல்லது அனைத்து சட்டப்பூர்வ நாமினிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சட்டப்பூர்வ நாமினியின்) உரிமைகள் மற்றும் வைப்புத் தொகையாளர் இறந்ததற்கான சான்று ஆகியவற்றை நிச்சயப்படுத்திக் கொண்ட பின் அவர்களுக்கு\அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

நாமினியை நியமிப்பதின் அம்சங்கள்:

• வைப்பு நிதி வங்கி கணக்குகள், பாதுகாப்பு பெட்டகம், பொருள்கள் காப்புப் பொறுப்பு ஆகியவற்றுக்கு, வங்கிகள், நாமினி நியமன வசதி வழங்குகின்றன.

• தனி நபர் ஒருவரை மட்டும் கூட நாமினியாக நியமிக்கலாம்

• தனி உரிமை சார்ந்த கணக்குகளும் நாமினி நியமனத்துக்கு உட்பட்டதாகும்

• குடியிருப்பாளர் ஒருவர், புறக்குடியிருப்பாளர் ஒருவரைக் கூட நாமினியாக நியமிக்கப்படலாம்.

• ஒரு கணக்குக்கு, ஒரேயொரு நபர் கூட நாமினியாக நியமிக்கப்படலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bank வங்கி
English summary

Why is nomination necessary in bank accounts? | வங்கி கணக்குகளுக்கு நாமினி ஏன் அவசியம்?

Nomination is a must when it comes to all forms of bank accounts and even fixed deposits. If there is a nomination, bank would simply pay-off the amount in the balance of the deceased's account to the nominated person. This means that banks would not ask for succession certificate or other documents to verify claims of legal heirs. Please remember, that a death certificate is a must in every case.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X