பிக்சட் டெபாசிட்டைவிட அதிக லாபம் தரும் 4 கடன் பத்திரங்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பொதுவாக வங்கிகள் வழங்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களைவிட கடன் பத்திரங்கள் நல்ல லாபத்தைத் தருகின்றன. கடன் பத்திரங்கள் மூலம் வரி கட்டுவதிலிருந்து விலக்கும் கிடைக்கிறது. மேலும் இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் பணம் மிகவும் பாதுகாப்பானவை.

இந்த கட்டுரையில் சிறந்த லாபத்தைத் தரும் ஒரு சில கடன் பத்திரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

எஸ்பிஐ மேக்னம் இன்கம் ஃபண்ட் - வளர்ச்சி

எஸ்பிஐ மேக்னம் இன்கம் ஃபண்ட் - வளர்ச்சி

கடந்த ஆண்டு மட்டும் இந்த ஃபண்ட் 13 சதவீத லாபத்தைப் பெற்றிருக்கிறது. இதில் முதலீடு செய்வது மிகவும் தரமாக இருக்கும். அதுபோல் இதில் இருந்து வருகிற லாபமும், வங்கிகள் வழங்கும் பிக்சட் டெபாசிட்டுகளில் இருந்து வரும் லாபத்தைவிட அதிகமாகும். வட்டி விகிதம் குறைந்து வரும் இந்த வேளையில் இந்த ஃபண்ட் கண்டிப்பாக அதிக லாபத்தை வழங்கும்.

யுடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் - சீரான வளர்ச்சி

யுடிஐ டைனமிக் பாண்ட் ஃபண்ட் - சீரான வளர்ச்சி

இந்த ஃபண்டின் சராசரியான ஓராண்டு லாபம் 11 சதவீதம் ஆகும். மணி மார்க்கெட்டிங் மற்றும் கடன்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் இந்த ஃபண்ட் சீரான லாபத்தைப் பெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 26ம் தேதிப்படி இந்த ஃபண்டின் நெட் அசட் மதிப்பு ரூ.12.748 ஆகும்.

டெம்பிள்டன் இந்தியா லோ டியூரேஷன் ஃபண்ட் - வளர்ச்சி

டெம்பிள்டன் இந்தியா லோ டியூரேஷன் ஃபண்ட் - வளர்ச்சி

கடந்த ஆண்டு இந்த ஃபண்ட் 10 சதவீதத்தைவிட அதிக லாபத்தைப் பெற்றிருக்கிறது. கடன்கள் மற்றும் மணி மார்க்கெட்டில் முதலீடு செய்து இந்த ஃபண்ட் ஒரு நிலையான லாபத்தை உருவாக்குகிறது. கடந்த மார்ச் 28ம் தேதி அன்று இந்த ஃபண்டின் நெட் அசட் மதிப்பு ரூ.12.6984 ஆகும்.

ஜேஎம் மணி மேனேஜர் ஃபண்ட்- ரெகுலர் ஃபண்ட்- வளர்ச்சி

ஜேஎம் மணி மேனேஜர் ஃபண்ட்- ரெகுலர் ஃபண்ட்- வளர்ச்சி

கடந்த ஆண்டு இந்த ஃபண்ட் 9.88 சதவீத லாபத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த ஃபண்ட் அரசு துறைகளில் முதலீடு செய்கிறது. மார்ச் 28ம் தேதி அன்று இதன் நெட் அசட் மதிப்பு ரூ. 16.2906 ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

4 super debt funds that beat bank FD rates | லாபத்தில் பிக்சட் டெபாசிட்டை முந்திய 4 கடன் பத்திரங்கள்

Debt mutual funds have the ability to provide better returns then bank fixed deposits and can be tax efficient as well, making returns even higher. They are virtually risk free as most mutual funds put money in highly secure debt instruments. Above are few debt funds one can consider.
Story first published: Friday, May 3, 2013, 12:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X