2013 ஆம் நிதியாண்டு ஏற்கனவே முடிந்துவிட்டது. வரும் ஜூலை 31க்குள் வருமான வரி செலுத்துவதற்கான வருமான அறிக்கையை ஒவ்வொருவரும் சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளார்கள். வருமான வரிக்கான அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்பு கீழ்கண்டவற்றை நினைவில் வைத்துக் கொண்டால் அது ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
வரியில்லாத வருமானத்தைப் பலரும் பெறுகின்றனர். உதாரணமாக, பங்குகளில் இருந்து பெறும் டிவிடன்ட் பணத்திற்கு வரி செலுத்த தேவையில்லை. ஆனால் அந்த தொகையை கண்டிப்பாக நீங்கள் வருமானவரித் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதுபோல் சேமிப்புக் கணக்கில் சேமித்த பணத்திற்கு ரூ.10,000க்கும் அதிகமாக வட்டியைப் பெற்றால் அந்தத் தொகைக்கும் வரி செலுத்த தேவையில்லை. ஆனால் அந்த வருமானத்தை வருமானவரித் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை சிறு குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்கி அந்த கணக்கிலிருந்து நீங்கள் வட்டியைப் பெற்றால், அந்த வருமானம் பெற்றோரான வருமானத்தோடு இணைக்கப்பட வேண்டும். அதோடு அந்தப் பிள்ளைகள் மூலம் வரும் இதர வருமானங்களும் பெற்றோரின் வருமானத்தோடு இணைக்கப்பட வேண்டும். ஆன்லைன் மூலம் உங்கள் வருமானத்தை டிஜிட்டல் கையொப்பம் இல்லாமல் தாக்கல் செய்த பின்பு, ஐடிஆர்-வி படிவத்தை 30 நாட்களுக்குள் வருமானவரித் துறைக்கு அனுப்பிவிட வேண்டும். அவ்வாறு 30 நாட்களுக்குள் வருமானவரித் துறையை ஐடிஆர்-வி படிவம் சென்று சேரவில்லை என்றால் நீங்கள் வருமான அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை என்றாகிவிடும். அடிக்கடி உங்கள் வங்கி நடவடிக்கைகளைச் சரி செய்து கொள்ள வேண்டும். வரிவிலக்கு பெற்ற உங்களது பணம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் தவறான வங்கிக் கணக்கைக் கொடுத்துவிட்டு, பின் ஐடி துறையைக் குறை சொல்லக் கூடாது. வருமான வரி அறிக்கையாத் தாக்கல் செய்ய ஏராளமான படிவங்கள் உள்ளன. உங்கள் வருமானம் எந்தந்த வழிகளில் வருகிறது என்பதற்கு ஏற்ப நீங்கள் வருமானவரி படிவங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது நீங்கள் நிறுவனத்தில் வேலை செய்து மாதம் வருமானம் பெறுபவராக இருந்தால் ஐடிஆர் - 2 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மிகவும் முக்கியமாக நீங்கள் செய்திருக்கும் மிகப் பெரிய பணப் பரிவர்த்தனையை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் சொத்துக்களை வாங்குதல் அல்லது அதிக அளவில் பங்குகளை வாங்குதல் போன்றவற்றை கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும்.
வரியில்லாத வருமானத்தை அறிவித்தல்
சிறு குழந்தைகள் மூலம் பெறும் வருமானம்
ஐடிஆர்-வி படிவத்தை போஸ்ட் செய்ய மறந்துவிடாதீர்கள்
தவறான வங்கிக் குறிப்புகள்
சரியான ஐடிஆர் படிவத்தை தேர்ந்தெடுத்தல்
ஆண்டு வருமானம் தகவல்
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications