ஆயுள் காப்பீட்டை இடையில் நிறுத்தும் பொழுது எழும் 9 கேள்விகளுக்கான பதில்கள்!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அம்ரிதா விடா முயற்சியுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆயுள் காப்பீடு பிரிமியத்தை செலுத்தி வந்தாள். ஆனால் தற்பொழுது பணம் மிக அவசரமாக தேவைப்படுவதால், ஆயுள் காப்பீடை இடையில் முறித்து, பணத்தை திரும்பப்பெறும் முடிவிற்கு வந்தாள். அப்பொழுது அவளுடைய முகவர், இது ஒரு 'மோசமான யோசனை', எனத் தெரிவித்தார். அப்பொழுதுதான் அம்ரிதா முதன் முறையாக 'சரணடைதல் கட்டணம்' மற்றும் 'சரணடைதல் மதிப்பு' போன்ற சொற்களை கேட்கிறாள். அந்த வார்தைகளுக்கு என்ன அர்த்தம் ?, எவ்வாறு தன்னுடைய காப்பீடை பாதிக்கும்? என்கிற கேள்வி அம்ரிதாவின் மனதில் எழுந்தது.

சரணடைதல்  கட்டணம் என்றால் என்ன?

சரணடைதல் கட்டணம் என்றால் என்ன?

சரணடைதல் கட்டணம் என்பது பாலிசியின் காலத்தை முறித்து இடையில் வெளியேறும் பொழுது காப்பீட்டு நிறுவனங்கள் விதிக்கும் ஒரு அபராத தொகை ஆகும். இது போன்ற அபராதங்கள் காப்பீட்டை இடையில் முறிப்பதால் காப்பீடு நிறுவனத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடு செய்வதற்காக விதிக்கபடுகிறது.

2 சரணடைதல் கட்டணம் என்பது காப்பீட்டின் ஆயுள் முழுவதற்கும் பொருந்துமா?

2 சரணடைதல் கட்டணம் என்பது காப்பீட்டின் ஆயுள் முழுவதற்கும் பொருந்துமா?

சரணடைதல் கட்டணம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விதிக்கபடுகிறது, இது காப்பீட்டின் ஆயுள் முழுவதற்கும் பொருந்தாது. காப்பீடு மற்றும் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (IRDA), இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள், காப்பீட்டின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே சரணடைதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

எனவே அம்ரிதா ஐந்து ஆண்டுகளின் முடிவில் காப்பீடை முறித்து வெளியேறும் பட்சத்தில் சரணடைதல் கட்டணத்தை கட்ட தேவையிருக்காது.

 

 

3 சரணடைதல் மதிப்பு என்றால் என்ன?

3 சரணடைதல் மதிப்பு என்றால் என்ன?

அம்ரிதா ஐந்தாண்டு காலத்திற்குள் காப்பீடை முறித்து வெளியேறுவதாக இருந்தால், காப்பீட்டு நிறுவனம் அவளுடைய சேமிப்பு மற்றும் வட்டியை கணக்கிட்டு அதிலிருந்து, சரணடைதல் கட்டணத்தை கழித்துக் கொண்டு மீதியை கொடுக்கும். அம்ரிதா பெறும் இறுதி தொகை சரணடைதல் மதிப்பு என அழைக்கப்படுகிறது.

4 சரணடைதல் மதிப்பு என்பது அனைத்து காப்பீடு திட்டங்களுக்கும் பொருந்துமா?

4 சரணடைதல் மதிப்பு என்பது அனைத்து காப்பீடு திட்டங்களுக்கும் பொருந்துமா?

இல்லை. சரணடைதல் மதிப்பு என்பது சேமிப்பை அடிப்படையாக கொண்ட காப்பீடு திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். பாரம்பரிய தவணை காப்பீடு திட்டங்களுக்கு சரணடைதல் மதிப்பு கிடையாது. ஆனால், யூனிட் காப்பீட்டு திட்டங்கள், அதாவது யூலிப் மற்றும் என்டொவ்மென்ட் திட்டங்களுக்கு உண்டு. ஏனெனில் அவற்றில் ஒருங்கிணைந்த சேமிப்பு வசதிகள் உள்ளன.

 5 எப்பொழுது எனது காப்பீட்டிற்கு சரணடைதல் மதிப்பு கிடைக்கும்?

5 எப்பொழுது எனது காப்பீட்டிற்கு சரணடைதல் மதிப்பு கிடைக்கும்?

பாலிசிதாரர் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு பிரிமியம் செலுத்தி வருகிறார் என்றால் அவருடைய காப்பீட்டிற்கு சரணடைதல் மதிப்பு கிடைக்கிறது. அம்ரிதாவின் காப்பீடை பொறுத்த வரை அவருடைய காப்பீட்டிற்கு சரணடைதல் மதிப்பு எற்கனவே கிடைத்து விட்டது. ஏனெனில் அவர் தொடர்சியாக நான்கு ஆண்டுகள் பிரிமியம் செலுத்தி வருகிறார். எனினும், காப்பீட்டிற்கு ஐந்தாண்டு காலம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே அவர் சரணடைதல் கட்டணத்தை கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

6 காப்பீட்டிற்கு சரணடைதல் மதிப்பு கிடைத்த பிறகு நான் வேறு என்ன செய்ய முடியும்?

6 காப்பீட்டிற்கு சரணடைதல் மதிப்பு கிடைத்த பிறகு நான் வேறு என்ன செய்ய முடியும்?

அம்ரிதாவிற்கு அவசரமாக பணம் தேவைப் படுவதால் அவர் காப்பீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து விட்டார். அவ்வாறு இல்லையெனில் அவருடைய காப்பீட்டிற்கு சரணடைதல் மதிப்பு கிடைத்த பிறகு அவர் அதை பேய்ட்-அப் ஆக மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு செய்கையில், அவர் சரணடைதல் அபராதங்களிலிருந்து தப்பிக்க முடியும். அம்ரிதாவின் காப்பீட்டை பொறுத்த வரை அவர் நான்கு ஆண்டுகளுக்கு பிரிமியம் செலுத்தியதால் அது முதலீடாக உறைந்து போய் விட்டது. அதன் பின்னர் அம்ரிதாவிற்கு இருக்கும் ஒரே தலைவலி, காப்பீடு முதிர்வடையும் வரை காப்பீடு பத்திரத்தை பத்திரமாக பாதுகாப்பது மட்டுமே.

 7 காப்பீட்டை விட்டு வெளியேறினால் எதையெல்லாம இழக்க நேரிடும்?

7 காப்பீட்டை விட்டு வெளியேறினால் எதையெல்லாம இழக்க நேரிடும்?

நீங்கள் காப்பீட்டை இடையில் முறிக்கும் பொழுது அனைத்து விதமான நன்மைகளையும், அதாவது மரணம் அல்லது முதிர்வு நன்மைகள் உட்பட அனைத்தையும் இழக்க நேரிடும். முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் வெளியேறினால் சரணடைதல் கட்டணங்கள் உங்களுடைய சேமிப்பின் பெரும் பகுதியை தின்று விடும்.

 8 எது காப்பீட்டிலிருந்து வெளியேற சிறந்த நேரம்?

8 எது காப்பீட்டிலிருந்து வெளியேற சிறந்த நேரம்?

நீண்ட கால திட்டத்தின் பார்வையில் மட்டுமே ஆயுள் காப்பீடு அர்த்தமுள்ளதாக இருக்கும். பொதுவாக நீங்கள் உங்களுடைய நிதி தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்ல என்றால் மட்டுமே காப்பீட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது உங்கள் முகவர் உங்களுக்கு காப்பீடை தவறாக விற்பனை செய்து விட்டார் என நீங்கள் நினைத்தால் மட்டுமே வெளியேற வேண்டும்.

 9 சரணடைதல் மதிப்பு, காப்பீட்டை தொடருவதில் மற்றதை ஏற்படுத்துமா?

9 சரணடைதல் மதிப்பு, காப்பீட்டை தொடருவதில் மற்றதை ஏற்படுத்துமா?

உண்மையில், ஆம். நீண்ட காலத்திற்கு உங்களுடைய காப்பீட்டை தொடர்ந்தால், சரணடைதல் மதிப்பு கண்டிப்பாக அதிகரிக்கும். சில காப்பீட்டு நிறுவங்கள் இந்த சரணடைதல் மதிப்பிற்கு ஈடாக கடன்கள் வழங்குகின்றன. நீங்கள் வங்கிகளிலும் சரணடைதல் மதிப்பிற்கு எதிராக கடன் பெறலாம். இவ்வாறு கடன் பெறுவது உங்கள் காப்பீட்டின் சரணடைதல் மதிப்பை பாதிக்காது. மேலும், உங்களுக்கு வரிச் சலுகைகளும் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

9 Questions on Surrendering a Life Insurance Policy Answered! | ஆயுள் காப்பீட்டை இடையில் நிறுத்தும் பொழுது எழும் 9 கேள்விகளுக்கான பதில்கள்!

Amrita has diligently paid life insurance premiums for four years, but now wants to terminate the policy and collect the cash value because she needs the money. So she calls up her agent, who says, ‘Not a good idea.'
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X