திருமண பரிசிற்கு வரி செலுத்த வேண்டுமா?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

திருமண பரிசிற்கு வரி செலுத்த  வேண்டுமா?
சென்னை: நீங்கள் ரூ 50,000 க்கும் அதிக மதிப்புடைய பொருட்களை பரிசாகப் பெற்றால் அதற்கு இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி வரி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஆனால் அதே பரிசை நீங்கள் உங்களுடைய குறிப்பிட்ட சில உறவினர்களிடம் இருந்து பெற்றால் அதற்கு வரி விலக்கு உண்டு.

நீங்கள் உங்களுடைய திருமணத்தின் பொழுது உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் பெரிய அளவில் பணத்தை பரிசாக பெற்றீர்கள் எனில் அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. திருமணத்தின் பொழுது பணத்தை பரிசாக பெறலாம். அதற்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. எனவே, உங்கள் தந்தை உங்கள் திருமணத்தின் பொழுது உங்களுக்கு ரூ 10 லட்சத்தை பரிசாக கொடுத்தாரெனில் அதற்கும் வரி கிடையாது. அத்தகைய பரிசு பணத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திருமணத்தின் பொழுது பரிசாக பெறப்படும் பணத்திற்கு இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி வரி செலுத்த வேண்டும் விதிமுறை என்று இருந்தால் அது திருமணத் தம்பதிகளுக்கு மேலும் துன்பம் சேர்க்கும். முக்கியமான கேள்வி ஒன்று. திருமண பரிசை திருமணத் தேதி அன்றே பெறவேண்டுமா?. இதற்கு ஒரு தெளிவான பதில் இல்லை. வருமான வரி விதி முறைகளிலும் இதற்கு தெளிவான விளக்கம் இல்லை. நாம் இதற்கு தர்க்க ரீதியில் ஒரு பதிலை கண்டுபிடிக்க முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு சிலர் திருமணத்திற்கு முன்பும் வேறு சிலர் திருமணத்திற்கு பின்பும் திருமண பரிசை கொடுக்கலாம். எனவே திருமண பரிசு என்பது திருமணத்தை ஒட்டி பெறப்படும் பரிசை குறிக்கும். அதற்கு ஒரு குறிப்பிட்ட தேதி வரைமுறைகள் கிடையாது.

வெளிநாட்டு உறவினர் அனுப்பும் பரிசுப் பணம், திருமண தேதியில் சரியாக கிடைக்கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது.

இத்தகைய பரிசுக்குவரி உண்டு

அக்டோபர் 1, 2009 அன்று, நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் (CBDT) ரூ 50,000 அதிகமாக பணம் மற்றும் இதர பரிசு பொருட்களை பெற்றால் அதற்கு கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும் என்கிற விதிமுறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதற்கு முன்னர் இந்த மதிப்பிற்கு பரிசாகப் பெறப்படும் பணத்திற்கு மட்டுமே வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

பின்வரும் உறவினர் கொடுக்கும் பரிசுகளுக்கு வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளன.

1) உங்களுடைய மனைவி
2) உங்களுடைய சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள்
3) உங்களுடைய மனைவியின் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணைவர்கள்
4) உங்களுடைய பெற்றோர்களின் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை துணைவர்கள்
5) உங்களுடைய நேரடியான உறவுமுறைகள் (பெற்றோர், தாத்தா, பாட்டி, குழந்தைகள், பேரப்பிள்ளைகள்) அல்லது வழித்தோன்றல்கள் (குழந்தைகள், பேரப்பிள்ளைகள்)
6) உங்களுடைய மனைவியின் நேரடியான உறவுமுறைகள் (பெற்றோர், தாத்தா, பாட்டி, குழந்தைகள், பேரப்பிள்ளைகள்) அல்லது வழித்தோன்றல்கள் (குழந்தைகள், பேரப்பிள்ளைகள்)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Are wedding gifts taxable? | திருமண பரிசிற்கு வரி செலுத்த வேண்டுமா?

If you have just got married and received large amounts by way of cash from friends and relatives, then relax, it's not taxable. Gifts received by way of cash during marriages are also exempt, no matter who gives the same.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns