
எனவே உங்கள் வங்கிக் கணக்கின் இணை உரிமையாளரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது நல்லது. அவர் உங்கள் வயது வந்த குழந்தையாகவோ அல்லது உங்கள் உறவினராகவோ இருக்கலாம். ஆனால் அதில் உள்ள நன்மைகள் மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து உங்கள் வங்கிக் கணக்கின் இணை உரிமையாளரைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
உணர்வுப்பூர்வமாக உங்கள் வங்கிக் கணக்கின் இணை உரிமையாளரைத் தேர்ந்தெடுக்காமல், எதிர்காலத்தில் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் இழப்புகள் ஆகியவற்றை மனதில் வைத்து தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பாலும் தங்கள் குழந்தைகள் அல்லது நண்பர்களை தங்கள் வங்கிக் கணக்கின் இணை உரிமையாளர்களாக வைத்துக் கொள்கின்றனர்.
ஒருவரை வங்கிக் கணக்கின் இணை உரிமையாளராக சேர்த்துக் கொள்வது என்பது வெறும் பெயர் சேர்த்துக் கொள்வது அல்ல. மாறாக உங்களுடைய வங்கிக் கணக்கில் நீங்கள் செய்யும் நடவடிக்கைகள் அனைத்திலும் அவருக்கு முழு உரிமையையும் அதே நேரத்தில் முழு அதிகாரத்தையும் வழங்குகிறீர்கள்.
ஓனர்ஷிப் ரைட்ஸ்
ஓனர்ஷிப் ரைட்ஸ் என்றால் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் மற்றும் அவருடைய வங்கிக் கணக்கில் அவர் இணையாளராகச் சேர்த்திருக்கும் நபர் ஆகியோர் அந்த வங்கிக் கணக்கின் நடவடிக்கைகளுக்கு முழு உரிமையையும் மற்றும் முழு அதிகாரத்தையும் பெறுகிறார்கள் என்பதாகும்.
வங்கிக் கணக்கின் உரிமயாளர்களாக ஒரு தந்தையும் அவருடைய 18 வயது நிரம்பிய பையனும் இருக்கிறார்கள் என்றால், அந்த தந்தையும் அந்த பையனும் செக்குகளில் கையொப்பமிடவும், பில்களைக் கட்டவும் மற்றும் அந்த வங்கிக் கணக்கின் உரிமையாளர்களாக செயல்படவும் அதிகாரம் பெறுகின்றனர்.
சொத்துப் பிரிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள்
பொதுவாகச் சொத்துக்களைப் பிரிக்கும் போதுதான் உண்மையாகவே பிரச்சனைகள் எழுகின்றன. அதிலும் குறிப்பாக வங்கிக் கணக்கின் முதல் உரிமையாளர் இறந்துவிட்டால் இந்த பிரச்சனை கண்டிப்பாக எழும். எனவே நீங்கள் உயிருடன் இருக்கும் போதே உங்கள் வங்கிக் கணக்கின் இணை உரிமையாளரான உங்கள் மகனுக்கோ அல்லது உங்கள் உறவினருக்கோ, நீங்கள் இறந்தபின் எவ்வளவு தொகையை அல்லது சொத்துக்களை வழங்க இருக்கிறீர்கள் என்பதை முதலிலேயே முடிவு செய்து கொள்ள வேண்டும்.
இணை உரிமையாளரின் கடன்கள்
ஒருவரை உங்கள் வங்கிக் கணக்கின் இணை உரிமையாளராக நியமிப்பதற்கு முன்பாக அவரது கடன் நிலவரத்தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவரிடமிருக்கும் கடன்களை மிக எளிதாக வசூல் செய்வதற்காக வங்கிகள் அவரை உங்கள் வங்கிக் கணக்கின் உரிமையாளராக மிக எளிதாக ஏற்றுக் கொள்வார்கள். மேலும் ஒரு வேளை உங்கள் வங்கிக் கணக்கின் இணை உரிமையாளர் கடன்களோடு இறந்துவிட்டால் நீங்கள் அந்த கடன்களைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
எனவே தீர விசாரித்து உங்கள் வங்கிக் கணக்கின் இணை உரிமையாளர்களைத் தேர்ந்தெடுப்பது சாலச் சிறந்ததாக இருக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications