
கடனீட்டுப் பத்திரம் கிரெடிட் ரிஸ்க்கை தாங்கிச் செல்கிறது என்று சொல்லலாம். எனவே ஒரு கடனீட்டுப் பத்திரத்தை வாங்குவதற்கு முன்பாக அதன் கிரெடிட் ரேட்டிங்கை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சி.ஆர்.ஐ.எஸ்.ஐ.எல். மற்றும் ஐ.சி.ஆர்.ஏ. போன்ற நிறுவனங்கள் கடனீட்டுப் பத்திரங்களின் கிரெடிட் ரேட்டிங்கை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.
கடனீட்டுப் பத்திரத்தில் உள்ள மிக முக்கிய அம்சம் அதன் வட்டி விகிதம் ஆகும். அந்த வட்டி விகிதத்தில் ஒரு சில சிக்கல்களும் உள்ளன. கடனீட்டுப் பத்திரங்கள் மூலம் நமக்கு நல்ல வட்டி கிடைக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த பத்திரங்களை நீங்கள் மீண்டும் விற்கும் போது அதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
உதாரணமாக ரூ.990 மதிப்பிலான ஒரு கடனீட்டுப் பத்திரத்தை வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த கடனீட்டுப் பத்திரம், அதன் பேஸ் வேல்யூவின் அடிப்படையில் உங்களுக்கு அரையாண்டுக்கு ஒரு முறை 10 சதவீத வட்டியை வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் தற்போது ஒரு புதிய கடனீட்டுப் பத்திரம் அதன் பேஸ் வேல்யூவின் அடிப்படையில் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியை வழங்குவதாக உறுதி அளிக்கிறது. இந்த நிலையில் நீங்கள் வைத்திருக்கும் குறைந்த வட்டி விகிதம் கொண்ட கடனீட்டுப் பத்திரத்தை நீங்க விற்க முற்பட்டால் அதை வெகு சிலரே வாங்க முன் வருவர். ஏனெனில் ஏற்கனவே அதிக வட்டியை வழங்கும் புதிய கடனீட்டுப் பத்திரம் சந்தைக்கு வந்திருக்கிறது. ஆகவே இந்த சிக்கலையும் மனதில் கொண்டே கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
கடனீட்டுப் பத்திரங்களில் உள்ள இன்னொரு சிக்கல் என்னவென்றால் அதில் இருக்கும் லிக்விடிட்டி ஆகும். சந்தையில் லிக்விடிட்டி மிகவும் குறைவாக இருக்கும் போது, நீங்கள் உங்கள் கடனீட்டுப் பத்திரத்தை விற்க முற்பட்டால் அதை வாங்குவதற்கு போதுமான முதலீட்டாளர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் உங்கள் கடனீட்டுப் பத்திரத்தின் விலையும் கணிசமான அளவிற்கு குறைந்துவிடும். எனினும் அரசு வழங்கும் கடனீட்டுப் பத்திரங்களுக்கு எப்போதுமே அதிக மவுசு உண்டு.
சிக்கல்கள் பல இருந்தாலும் கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்வது எப்போதும் லாபகரமாகவே இருக்கும். ஆனால் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாது. சராசரியான லாபத்தைக் கண்டிப்பாக பெறலாம். ஆனால் அதில் உள்ள சிக்கல்களைத் தெரிந்து கொண்டு கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications