
அவ்வாறு வாடகை மூலம் வரும் வருமானம் அவர்களின் மொத்த வருமானத்தில் ஒரு பகுதியாகும். எனவே அதற்கேற்ப அந்த வருமானத்திற்கு வரி கணக்கிடப்படுகிறது.
அதாவது வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியர், இந்தியாவில் இருக்கும் தனது வீட்டில் இருந்து வரும் வாடகை மூலம் ரூ.2 லட்சமும், இதர மூலங்கள் மூலம் ரூ.2 லட்சமும் வருமானம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தான் மொத்தமாக ஈட்டும் ரூ.4 லட்சத்திற்கும் சேர்த்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் அவர் பெறும் வாடகை அவருடைய என்.ஆர்.ஓ. வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும். அவருடைய என்.ஆர்.இ. கணக்கில் செலுத்தப்படக் கூடாது. ஒரு வேளை வாடகையை செலுத்துபவர் ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக இருந்து அவர் என்.ஆர்.இ. வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அந்த கணக்கில் செலுத்தலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாடகை மூலம் பெறும் வருமானத்திற்கு அவர்கள் வசிக்கும் நாடுகளில் வரி செலுத்த வேண்டுமா?
ஆம். அதற்கான வாய்ப்பு உண்டு. பல நாடுகள் தங்கள் மக்களிடமிருந்து அவர்கள் உலக அளவில் பெறும் வருமானத்திற்கு வரி வசூல் செய்கிறது. ஆனால் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர், அவர் வாழும் நாடானது இந்தியாவுடன் டபுள் டாக்சேஷன் அவாய்டன்ஸ் அக்ரீமென்ட் (டிடிஏஏ) ட்ரீட்டி வைத்திருந்தால், வாடகை மூலம் பெறும் வருமானத்திற்கு அவர் அந்த நாட்டிற்கு வரி செலுத்த தேவையில்லை.
டிடிஏஏ ஒப்பந்தம் என்றால் ஒருவர் ஏற்கனவே தனது தாய்நாட்டிற்கு வரி செலுத்துகிறார் என்று பொருள். எனவே அவர் தனது தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசிக்கும் போது அந்த நாட்டிற்கு அவர் வாடகை மூலம் பெறும் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை.
உதாரணமாக, இந்தியாவும் அமெரிக்காவும் இந்த டிடிஏஏ ஒப்பந்தத்தை வைத்திருக்கின்றன. எனவே அமெரிக்காவில் வாழும் ஒரு இந்தியர், அந்த நாட்டில் வரி செலுத்துவதற்காக தனது வருமானத்தை ஃபைல் செய்யும் போது, தான் வாடகை மூலம் இந்தியாவில் பெறும் வருமானத்திற்கு, வரி விலக்கு வேண்டி விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு வாடகை மூலம் பெறும் வருமானத்திற்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டும். ஏனெனில் அவருடைய சொத்து இந்தியாவில் இருக்கிறது. அந்த சொத்திலிருந்து வாடகை பெறுகிறார் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications