
எனினும் ரிசர்வ் வங்கி என்ஆர்ஓ கணக்கில் இருந்து என்ஆர்இ கணக்கிற்கான பணப் பரிமாற்றத்திற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
அந்த நிபந்தனைகள் பின் வருமாறு:
1. வெளிநாடுகளுக்கு மற்றும் பிற என்ஆர்இ கணக்குகளுக்கு ஒரு நிதி ஆண்டிற்குள் மேற்கொள்ளப்படும் அதிகபட்ச நிதிப்பரிமாற்ற உச்ச வரம்பு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
2. என்ஆர்ஓ வைப்பு அல்லது கணக்குகளுக்கான நிதி ஆதாரம் வெளிநாட்டிலிருந்து சொந்த நாட்டிற்கு மாற்றத் தக்கதாய் இருக்க வேண்டும்.
3. பணத்தை பரிமாற்றுவதற்கு முன்னர் அதற்குறிய வரியை செலுத்த வேண்டும். அதாவது 15 சிஏ மற்றும் சிபி படிவத்தை, பணத்தை பரிமாற்றும் வங்கியில் செலுத்த வேண்டும்.
டிசம்பர் 2011ல் ஏற்பட்ட ரூபாயின் வீழ்ச்சியானது மத்திய ரிசர்வ் வங்கியை என்ஆர்இ வங்கிக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றத் தூண்டியது. அதனை தொடர்ந்து நம் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் என்ஆர்ஓ கணக்கிற்கு சமமாக என்ஆர்இ கணக்குகளின் வட்டியை உயர்த்தின.
தற்பொழுது, வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்ஆர்இ கணக்குகளில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகிறார்கள். ஏனெனில், அந்த நிதியை அவர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் பரிமாற்றிக்கொள்ளளாம். மேலும் அவர்களின் முதலீட்டிற்கு வரிச் சலுகையும் கிடைக்கிறது. பணப் பரிமாற்ற சுதந்திரத்தை பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளர் சரியான நேரத்தில், அதாவது நாணயங்களுக்கு இடையே அதிக ஏற்றத் தாழ்வு நிகழும் பொழுது, தங்களுடைய பணத்தை, தங்களுடைய கணக்குகளுக்கு இடையே மாற்றி லாபமடையலாம்.
நீங்கள் ஒரு வெளிநாடுவாழ் இந்தியர் என்பது எப்படி தெரியும்?
இந்தியாவின் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (எப்இஎம்ஏ) படி ஒரு இந்திய குடிமகன் அல்லது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டவர் வெளிநாடுகளில் வேலை நிமித்தமாகவோ, வியாபார நோக்கமாகவோ, விடுமுறைக்காகவோ நீண்ட காலம் தங்க முற்படும் பொழுது, வெளிநாடுவாழ் இந்தியர் என்கிற தகுதியை பெறுகிறார். ஓரு தனி நபர், முந்தைய நிதி ஆண்டில் இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாக தங்கி இருந்தார் எனில் அவரை ஒரு வெளிநாடுவாழ் இந்தியராக கருத முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications