டிடிஎஸ் குறைப்பு இல்லாத முதலீடுகள்!!

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

டிடிஎஸ் குறைப்பு இல்லாத முதலீடுகள்!!
சென்னை: முதலீடுகளில் இருந்து கிடைக்கும் எல்லா வருமானங்களுக்கும் டிடிஎஸ்(TDS) குறைப்பு செய்யப்படுவதில்லை. சில செக்யூரிட்டிகளுக்கு டிடிஎஸ் குறைப்பு செய்யப்படமாட்டாது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பில்லாத லோன் சான்றிதழ்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு அந்த நிறுவனம் டிடிஎஸ் குறைப்பு செய்யாது.

(How to take loan from PPF account?)

சமீப காலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் நோன் கன்வர்ட்டிபிள் டெபன்ச்சர்ஸ் (NCD) அல்லது பாதுகாப்பில்லாத லோன் சான்றிதழ்களை வழங்குவதில்லை. ஆனால் நீங்கள் அவற்றை பங்கு வர்த்தகத்தில் வாங்கலாம். ஸ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட், மணப்புரம் பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ் மற்றும் ரெலிகரே போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பில்லாத லோன் சான்றிதழ்களை வழங்குகின்றன.

இந்த பாதுகாப்பில்லாத லோன் சான்றிதழ்களில் (NCD) செய்யப்படும் முதலீடுகளில் இருந்து பெறும் வருமானத்திற்கு டிடிஎஸ் கழிக்கப்படுவதில்லை. ஆனால் அந்த வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். மேலும் வருமான அறிக்கை சமர்ப்பிக்கும் போது இந்த வருமானத்தையும் வருமானவரித் துறைக்கு காட்ட வேண்டும்.

மேலும் வரி இல்லாத மற்றும் டிடிஎஸ் கழிக்கப்படாத ஒரு சில பாண்டுகளும் உள்ளன. இந்த பாண்டுகளை பங்குச்சந்தையில் வாங்கலாம். குறிப்பாக இந்தியன் ரயில்வேஸ் பைனான்ஸ் கார்ப்பரேசன், ஹட்கோ(HUDCO), ரூரல் எலக்ட்ரிபிக்கேசன் அன்ட் நேசனல் ஹைவேய்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா போன்றவை இந்த பாண்டுகளை வழங்குகின்றன.

மற்ற முதலீடுகளில் இருந்து பெரும் வருமானத்தில் இருந்து டிடிஎஸ் கழிக்கப்படுகின்றன. அதாவது நீங்கள் உங்களுடைய பான் கார்டின் நகலை சமர்ப்பிக்கிறீர்களா இல்லையா என்பதைப் பொருத்து 10 சதவீத டிடிஎஸ் கழிக்கப்படும்.

பேன் கார்டு நகலை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கு 20 சதவீத டிடிஎஸ் கழிக்கப்படும்.

மற்ற முதலீடுகளான வங்கி நிரந்தர வைப்பு நிதிகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு டிடிஎஸ் கழிக்கப்படுகின்றன. வங்கி நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வருமானம் ரூ.10,000திற்கு அதிகமாக இருந்தால் அதற்கு டிடிஎஸ் கழிக்கப்படும். அதே நேரத்தில் நிறுவனங்களின் நிரந்தர வைப்பு நிதிகளில் இருந்து கிடைக்கும் வட்டி ரூ.5000திற்கும் அதிகமாக இருந்தால் அதற்கு டிடிஎஸ் கழிக்கப்படும்.

உங்களுடைய முதலீடுகளில் இருந்து பெரும் வருமானத்திற்கு டிடிஎஸ் கழிக்கும் நிறுவனம், அதை வருமானவரித் துறைக்கு செலுத்தி, அதற்கான டிடிஎஸ் சான்றிதழை உங்களுக்கு வழங்க வேண்டும். நீங்கள் டிடிஎஸ் செலுத்திவிட்டீர்கள் என்பதற்கு சான்றாக இந்த டிடிஎஸ் சான்றிதழ் விளங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Read more about: deposits
English summary

Deposits and instruments where there is no TDS deduction | டிடிஎஸ் குறைப்பு இல்லாத முதலீடுகள்!!

It's not as if all instruments have income tax deducted at source (TDS). There are certain securities where no TDS is cut.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns