
அவ்வாறு ஆண்டின் இடைப்பட்ட காலங்களில், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து விலகி புதிய நிறுவனத்தில் சேரும்போது அவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சினை பி.எஃப். கணக்கை பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றுவதாகும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் பி.எஃப். கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும் என்றால் அதற்கான விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் பி.எஃப். கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்ற பல மாதங்களோ அல்லது பல ஆண்டுகளோ ஆகும்.
இதற்கு முன்பு நிலைமை இதைவிட மோசமாக இருந்தது. அதாவது அவர்கள் சமர்பித்த பி.எஃப். விண்ணப்பம் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா அல்லது அவர்களுடைய பி.எஃப். கணக்கு புதிய நிறுவனத்திற்கு மாறிவிட்டதா என்பது தெரியாத நிலையில் இருந்தது.
தற்போது பி.எஃப். கணக்கு மாற்றத்தை எளிமையாக்கும் விதமாக இபிஎஃப்ஓ ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்த திட்டத்தின்படி ஊழியர்கள் தங்கள் பி.எஃப். கணக்கை ஆன்லைன் மூலம் மிக எளிதாக தங்களின் புதிய நிறுவனத்திற்கு மாற்ற முடியும்.
ஆன்லைன் மூலம் மாற்றுவதில் உள்ள நன்மைகள்:
முதன் முதலாக ஆன்லைன் வசதி பழைய முறையில் உள்ள அனைத்து சிக்கல்களையும் தீர்த்து வைக்கிறது. இரண்டாவதாக, ஆன்லைன் மூலம் மாற்றும் போது பி.எஃப். கணக்கு மாற்றம் எந்த அளவில் இருக்கிறது என்ற நிலவரத்தை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஆன்லைன் மூலம் மிக விரைவாக பி.எஃப். கணக்கு மாற்றம் நடைபெறும். அதற்காக ஊழியர்கள் தங்கள் நிறுவனத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை வாங்கி அதை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை. அதன் மூலம் அவர்களுக்கு அதிகப்படியான நேரம் மிச்சமாகிறது.
இறுதியாக ஆன்லைன் மூலம் பி.எஃப். கணக்கை விரைவில் மாற்ற இபிஎஃப்ஓ ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவிருக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications