வீட்டு பொருட்களுக்கான காப்பீடு: காப்பீடு செய்யப்படும் பொருட்கள் யாவை?

உங்க வீட்டு பொருட்களை இன்சூர் செய்துவிட்டீர்களா?
சென்னை: வீட்டு பொருட்களுக்கான காப்பீடு என்பது உங்கள் வீட்டிலுள்ள மதிப்பு மிக்க பொருட்களுக்கான காப்பீடை அளிக்கும். மேலும் சில காப்பீடுகள், தோட்டம் மற்றும் நாம் வெளியில் வைத்துள்ள பொருட்களுக்கும் காப்பீடு வழங்குகிறது.

திருட்டு அல்லது கொள்ளை போன்ற செயல்களுக்கு எதிராக ஒரு பலமான எச்சரிக்கை அமைப்பு அல்லது ஒரு வலுவான பூட்டு போன்றவற்றை பயன்படுத்துவது சாத்தியமான ஒன்று. ஆனால், இயற்கை சீற்றங்களுக்கு எதிராக வீட்டுப் பொருட்களைப் பாதுகாக்க எந்த ஒரு வழிமுறையும் இல்லை. ஒரு வீட்டில் உள்ள பொருட்கள் இயற்கை சீற்றங்களான பூகம்பம், தீ, மின்கசிவு போன்ற ஆபத்துகளால் கண்டிப்பாக பாதிக்கப்படும்.

எது எதற்கு காப்பீடு?

இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்கள் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு வழங்கும் காப்பீடு, நிறுவனங்களை பொருத்து மாறுபடுகிறது. ஆனால் பரவலாக பின்வரும் பொருட்களுக்கு காப்பீடு வழங்கப்படுகின்றன:

வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள்: தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், மேஜைக் கணினி, ஏசி, லேப்டாப் போன்ற பொருட்களுக்கு காப்பீடு கிடைக்கிறது.

வீட்டு பொருட்கள்: பிற வீட்டுப்பொருட்களான ஆடை, தளபாடங்கள், திரைச்சீலைகள், தட்டு மற்றும் தரைவிரிப்பு போன்றவற்றிற்கு காப்பீடு கிடைக்கிறது.

நகைகள்: வீட்டில் உள்ள பொருட்களில் நகைகள் மிக முக்கியமானது. தங்க நகைகள், பிற நகைகள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் போன்றவற்றிற்கு காப்பீடு கிடைக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டவை ஒரு வீட்டில் உள்ள பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். இது வீட்டிற்கு ஏற்படும் சேதத்திற்கு காப்பளிக்காது. அதற்கு தனியாக ஒரு வீட்டு காப்பீடு எடுக்க வேண்டும்.

வீடு என்பது நாம் சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் உணரும் ஒரு இடம் ஆகும். இது நம்முடைய வாழ்நாள் சேமிப்பாகும். எனவே, வீட்டிலுள்ள பொருட்களை பாதுகாக்க நாம் போதுமான அளவிற்கு வீட்டு பொருட்களுக்கான காப்பீடு பெறுவது ஆபத்து காலங்களில் எற்படும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க உதவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+