வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து எவ்வாறு கடன் பெறுவது?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து எவ்வாறு கடன் பெறுவது?
சில வரம்புளுக்கு உட்பட்டு மற்றும் பிற தேவைகளை அடிப்படையாக கொண்டு உங்களுடைய பொது வருங்கால வைப்பு நிதியின் சேமிப்பிற்கு(PPF), எதிராக கடன் பெற முடியும். நீங்கள் உங்களுடைய கணக்கை தொடங்கிய 3ம் ஆண்டிலிருந்து 6 வது ஆண்டு வரை கடன் பெற முடியும். மேலும், கடன் தொகை அதிக பட்சமாக முதல் நிதியாண்டின் மொத்த சேமிப்பில் 25 சதவீத அளவிற்கு மட்டுமே இருக்க வேண்டும் (நீங்கள் மூன்றாவது ஆண்டில் கடன் பெற விண்ணப்பித்தால்). நீங்கள் நான்காவது ஆண்டில் கடன் பெற விண்ணப்பித்தால், இரண்டாவது ஆண்டின் இருப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கடன் விண்ணப்பத்தை நீங்கள் http://www.indiapost.gov.in/pdfForms/PPFLoan.pdf என்கிற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடனுக்கான விண்ணப்பத்தை உங்களுடைய பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு எண்ணை மேற்கோள் காட்டி, மேலாளரின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பத்தில் எப்பொழுது கடன் தொகையை திரும்பச் செலுத்துவீர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். மேலும், இதற்கு முன்னர் நீங்கள் பெற்ற கடன் மற்றும் அதை திரும்பச் செலுத்திய வரலாறு போன்றவற்றை குறிப்பிட வேண்டும். உங்களுடைய பற்றுவரவு புத்தகம் அதனுடன் இணைக்கப்பட்டு , உங்களுடைய விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கையெழுத்திட வேண்டும். உங்களுக்கு ஒரு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை தொடங்க வெறும் ரூ 100 மட்டுமே போதும் என்பது தெரியுமா?.

இந்த பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கை சம்பளம் பெறும் அல்லது சுய வேலை செய்யும் தனிநபர்கள் ரூ 100 முதலீடாகக் கொண்டு தொடங்கலாம். இந்த கணக்கை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அல்லது அதனுடன் தொடர்புடைய பிற வங்கிகளின் கிளைகளில் திறக்கலாம்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான பாங்க் ஆப் பரோடா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, மற்றும் பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகளும் இந்த சேவையை வழங்குகின்றன. பொது அஞ்சலகமும் இத்தகைய சேவையை வழங்குகிறது. தனிநபர்கள் சிறு குழந்தையின் சார்பாக அவர்களின் பாதுகாவலராக இருந்து பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை தொடங்கலாம். இப்போது, நீங்கள் ஆன்லைன் மூலமக பணத்தை கட்டும் வசதி வந்து விட்டது. எனவே, நீங்கள் வங்கிகள் அல்லது அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: loan, bank, sbi, கடன், வங்கி
English summary

How to take loan from PPF Account?

You can avail of loans against the balance in your public provident fund account (PPF), subject to certain ceilings and based on other requirements.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns