விர்ச்சுவல் கிரடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

விர்ச்சுவல் கிரடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விர்ச்சுவல் கிரடிட் கார்டுகள் எனப்படும் விர்ச்சுவல் கடன் அட்டைகள் இணைய வழி பரிவர்த்தனைகள் மற்றும் ஷாப்பிங் போன்றவற்றை செய்யும் வங்கி கணக்காளர்கள் பாதுகாப்பாக, தங்களுடைய வர்த்தகத்தை நடத்திச் செல்ல கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகும்.

மேலும் பல்வேறு இணைய வழி வியாபார நிறுவனங்கள் கடன் அட்டைகளையே பயன்படுத்த சொல்வதால், இந்த தற்காலிக கடன் அட்டைகள் பெருமளவு உபயோகப்படும் என்பதில் ஐயமில்லை. இந்த கடன் அட்டைகளை பயன்படுத்துவதால், நமது முதன்மையான கடன் அட்டைகளின் விபரங்களை முகம் தெரியாத நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

SBI விர்ச்சுவல் கிரடிட் கார்டுகளை வாங்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள தொடர்ந்த படியுங்கள். பெரும்பாலும், இதே வழிமுறைகள் தான் பிற வங்கிகளாலும் பின்பற்றப்பட்டு வரப்படுகின்றன.

1 : www.onlinesbi.com என்ற இணைய தள பக்கத்திற்கு சென்று உங்களுடைய இணைய வழி வங்கி கணக்கில் லோக்-இன் (Login) செய்யவும். பிறகு அங்கிருக்கும் ‘Requests' என்ற இடத்தில் உள்ள 'ஸ்டேட் பாங்க் விர்ச்சுவல் கார்டு' என்ற இடத்தை (க்ளிக்) தேர்வு செய்யவும்.

2 : தேர்வு செய்த பிரிவில் உள்ள 'விர்ச்சுவல் அட்டையை உருவாக்கு' என்ற இடத்தில் 'க்ளிக்' செய்யவும்.

3 : எந்த விர்ச்சுவல் கடன் அட்டை கணக்கிற்கு பணம் கொடுக்கப் பட வேண்டுமோ அந்த கணக்கில் செலுத்தப் பட வேண்டிய பணத்தின் அளவை குறிப்பிடவும் (முதலில் இணைப்பு ஏற்படுத்தப்படும், பின்னர் பணம் செலுத்தப்படும்).

4 : பிறகு, உங்களுடைய கைபேசிக்கு அனுப்பப்படும் 8 இலக்க(OTP) குறிப்பிடவும்.

5 : இது வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டால், புதிதாக உருவாக்கப்பட்ட விர்ச்சுவல் கடன் அட்டையில் --அதன் கடன் அட்டை எண், இறுதி நாள், மற்றும் சில தகவல்களுடன் கணிணியின் திரையில் தோன்றும். உங்களுடைய விர்ச்சுவல் கடன் அட்டை உருவாக்கப்பட்டு, அது உங்களுடைய பரிவர்த்தனைகளுக்கு தயாராக உள்ளது என்று அர்த்தமாகும்.

*குறிப்பு : இந்த கடன் அட்டையை நீங்கள் ஒரு முறை இணைய வழி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தினால் போதும், அதன் பரிவர்த்தனை காலம் முடிவடைந்து விடும். எனவே, மீண்டும் ஒரு முறை பரிவர்த்தனைகள் செய்ய மற்றுமொரு விர்ச்சுவல் கடன் அட்டையை மேற்கண்ட வழிகளில் உருவாக்கிக் கொள்ளலாம்

விர்ச்சுவல் கடன் அட்டைகள் என்றால் என்ன?

விர்ச்சுவல் கடன் அட்டைகளை எப்பொழுது பயன்படுத்தலாம்?
கடன் அட்டை விபரங்களை குறிப்பிடுவதில் நம்பிக்கை இல்லாத இணைய தளங்களில் நீங்கள் இந்த விர்ச்சுவல் கடன் அட்டைகளை பயன்படுத்தலாம்.

மேலும், உங்களுடைய விர்ச்சுவல் கடன் அட்டைகளின் விபரங்கள் உங்களுக்கு நெருக்கமாக உள்ள நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம், அவர்களுக்கு தேவையான பரிவர்த்தனைகளின் போது பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த இடங்களில், நீங்கள் முதன்மையாக பயன்படுத்தும் கடன் அட்டைகளின் விபரங்களை நீங்கள் யாரிடமும் தெரியப்படுத்தாததால், அது தவறாகப் பயன்படுத்தப்படும் என்ற பயம் இல்லை.

இணைய வழி வங்கி கணக்கு வசதி அல்லது பற்று அட்டை (Debit Card) ஆகியவை மட்டும் இருந்தால், விர்ச்சுவல் கடன் அட்டைகளை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த கடன் அட்டைகள் உங்களுடைய இணைய வழி பரிவர்த்தனைகள் மற்றும் ஷாப்பிங் போன்றவற்றை பாதுகாப்புடன் செய்ய வழி வகுக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+