
1. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்)
மத்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி பொது வருங்கால வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் வட்டி விகிதமானது 01.04.2013 முதல் 8.8 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒருவர் மிக அதிகமாக வரி செலுத்துபவராயிருந்தால் மட்டுமே பொது வருங்கால வைப்பு நிதி அளிக்கும் வட்டி விகிதம் கவர்ச்சிகரமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
(Aadhaar Card: How to check status online?)
ஒருவர் மிக அதிகமாக வரி செலுத்துபவராக இல்லாத பட்சத்தில் அவர் வங்கி வைப்புகளில் முதலீடு செய்வது தான் சிறந்தது என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் வங்கிகள் தமது வைப்புகளுக்கு 9 முதல் 9.25 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.
2. தேசிய சேமிப்புப் பத்திரங்கள்
தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்குத் தற்போது ஆண்டுக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 1,00,000 வரையான முதலீடுகளுக்கு வருமானவரிச் சட்டம் பிரிவு 80 சி-இன் கீழ் வரி விலக்கு உண்டு. தேசிய சேமிப்புப் பத்திரங்களிலிருந்து பெறப்படும் வருமானத்திலிருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதில்லை என்பது சுவையான விஷயம்.
3. அஞ்சலக மாதாந்திர சேமிப்புத் திட்டம்(பிஓஎம்எஸ்எஸ்)
அஞ்சலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு தற்போது ஆண்டுக்கு 8.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இத்திட்டம் மிகச் சிறப்பானதாகும். மேலும், மிக அதிகமான தொகையை முதலீடு செய்ய முடிந்தால், அவர்களுக்கும் இது மிகச் சிறப்பான திட்டமாகும்.
4. போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்ஸ்
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்ஸ் 1, 2, 3, மற்றும் 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையக் கூடியவையாக நான்கு வகைகள் உள்ளன. இச்சேமிப்புத் திட்டங்களுக்கு முறையே 8.20 சதவீதம், 8.20 சதவீதம், 8.30 சதவீதம் மற்றும் 8.40 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. வட்டியானது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டுவட்டியாகக் கணக்கிடப்படுகிறது.
2 ஆண்டு அல்லது 3 ஆண்டு அல்லது 5 ஆண்டு காலத்திற்கான தொடர் வைப்புகளை கணக்கு தொடங்கிய ஓராண்டு காலத்திற்குப் பிறகு முன்னதாக முடிக்க விரும்பினால், அவ்வைப்புகளுக்கு முறையே 1 ஆண்டு, 2 அல்லது 3 ஆண்டு காலத்திற்கு என்ன வட்டி அளிக்கப்படுமோ அதிலிருந்து 1 சதவீதம் குறைவாக வட்டி அளிக்கப்படும். இந்நடைமுறையானது 01.12.2011 முதல் மேற்கொள்ளப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications