முதலீட்டு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீட்டு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை
சென்னை: புதிய முதலீட்டாளர்கள் மற்றும் அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் போன்றோருக்கு முதலீட்டுத் திட்டம் என்பது மிகவும் முக்கியமான கட்டம். முதலீடு செய்ய தொடங்குவதற்கு முன்பாக அந்த முதலீடு மூலம் தான் அடைய வேண்டிய இலக்கை அவர் முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் ஏற்கனவே அதைப் பற்றி அறிந்து வைத்திருப்பர். ஆனால் புதிய முதலீட்டாளர்கள், முதலீடுகள் மூலம் வரும் வருமானம், அதற்கு செலுத்த வேண்டிய வரி, முதலீடுகளில் இருக்கும் ஆபத்துகள் போன்றவற்றைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் புதிதாக முதலீடு செய்ய இருபவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு விழிப்புணர்வை கொடுக்கும் என்று நம்பலாம்.

 

(How to take loan from PPF account? )

வருமான எதிர்பார்ப்பு மற்றும் ஆபத்து

சொத்துக்களில் முதலீடு செய்தால் அதில் உறுதியாக வருமானம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வெவ்வேறு சொத்துக்கள் வெவ்வேறான வருமானங்களை வழங்குகின்றன. அதே நேரத்தில் அந்த சொத்துக்களில் செய்யப்படும் முதலீடுகளில் ஆபத்துக்களும் உள்ளன. இதில் உள்ள மிக முக்கிய பொன்மொழி என்னவென்றால் "அதிக வருமானம் அதிக ஆபத்து இருக்கும். குறைவான வருமானம் குறைவான ஆபத்து " என்பதாகும். ஒவ்வொரு முதலீட்டாளரும் இதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மாற்றத்தக்க தன்மை சொத்து மற்றும் பரிமாற்ற கட்டணம்

ஒரு சொத்தின் மீது முதலீடு செய்வதற்கு முன்பாக அந்த சொத்து எவ்வளவு வேகத்தில் பணமாக மாறும் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் அவ்வாறு பரிமாற்றம் செய்யும் போது ஆகும் கட்டணத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, ரியல் எஸ்டேட்டில் உள்ள சொத்துக்கள் மிக வேகமாக பணமாக பரிமாற்றம் ஆகக்கூடியவை. ஆனால் இதில் இருக்கும் பரிமாற்றச் செலவு அதிகமாக இருக்கும். மேலும் பரிமாற்றம் செய்வதில் சில சிக்கல்களும் உள்ளன. குறைந்த பரிமாற்றக் கட்டணம் கொண்ட மிக வேகமாக பரிமாற்றம் ஆகும் சொத்தில் முதலீடு செய்வது மிகவும் விவேகமாக இருக்கும். அப்படிப் பார்த்தால் பங்குகள் மற்றும் தங்கம் ஆகியவை மிக வேகமாக பரிமாற்றம் ஆகக்கூடியவையாகும்.

பணவீக்கம்

சொத்தில் முதலீடு செய்வதில் உள்ள மிக முக்கிய எதிரி பணவீக்கம் . தற்போது இருக்கும் 7% பணவீக்கம், சேமிப்பு மற்றும் நிரந்தர வைப்பு நிதிகள் மற்றும் பிபிஎப்(PPF) ஆகியவற்றின் மீது ஆர்வம் குறைந்தே காணப்படுகின்றது. பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது முதலீடுகளில் கிடைக்கும் 4 முதல் 8 % வரை கிடைக்கும் வருமானத்தினால் எந்தவித பலனும் கிடைக்கப் போவிதல்லை. ஏனெனில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது மக்களின் வாங்கும் திறன் குறைகிறது. அப்போது சொத்துக்கள் பரிமாற்றம் ஆவதில் கால தாமதம் ஆகிறது.

வரி விதிப்பு

வரி செலுத்துவதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. முதலீடு செய்வதற்கு முன்பாக இதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் சில சொத்துகளில் வரி விதிவிலக்கு உள்ளது,மற்ற சொத்துகள் மீது வரும் வருமானத்திற்கு கண்டிப்பாக வரி செலுத்தியே ஆகவேண்டும். உதாரணமாக நீங்கள் பங்குகள் மீது முதலீடு செய்தால் அதிலிருந்து வரும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் நீங்கள் நீண்ட கால பங்குகளில் முதலீடு செய்தால் அதற்கு வரிவிலக்கு உண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Investment planning: A few points to keep in mind | முதலீட்டு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை

Investment planning is one of the most important steps in investment process, both for new as well as seasoned investors. Before beginning the investment journey, one should clearly outline the objectives and goals one wants to achieve while investing.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X