உங்கள் பட்டுக்குட்டிகளுக்காக எல்ஐசி ஜீவன் கிஷோர்

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

உங்கள் பட்டுக்குட்டிகளுக்காக எல்ஐசி ஜீவன் கிஷோர்
சென்னை: எல்ஐசி நிறுவனம் 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு எல்ஐசி ஜீவன் கிஷோர் என்ற ஒரு என்டோமென்ட் திட்டத்தை வழங்கியிருக்கிறது. இந்த திட்டத்தை அந்த குழந்தைகளின் பெற்றோரில் ஒருவர் அல்லது அவர்களுடைய தாத்தா அல்லது பாட்டி ஆகியோர் வாங்கலாம்.

ரிஸ்க் கவர்

இந்த பாலிசியை எடுத்து இரண்டு வருடங்கள் அல்லது குழந்தையின் ஏழு வயது நிறைவில் வரும் பாலிசியின் ஆண்டு தினம் ஆகியவற்றில் எது தாமதமாக வருகிறதோ அதற்கு பின் இந்த பாலிசி ரிஸ்க்கை கவர் செய்யும் என்று எல்ஐசி தெரிவிக்கிறது.

பிரிமீயம்

பாலிசி காலம் முழுவதும் ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ அல்லது அறையாண்டுக்கு ஒரு முறையோ பிரிமீயத் தொகையைக் கட்டலாம். அல்லது ஒரு வேளை குழந்தை விரைவில் இறந்துவிடும் பட்சத்தில் அதுவரை கட்டலாம். அல்லது ஒரே தவணையாக பிரிமீயத் தொகையைக் கட்டலாம்.

போனஸ்

ஜீவன் கிஷோர் திட்டம் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. இந்த பாலிசியில் சேர்வதன் மூலம் பாலிசிதாரர் லைஃப் இன்சூரன்ஸ் வர்த்தகத்தின் லாபத்தில் பங்கு பெறுகிறார். போனஸ் வடிவில் பாலிசிதாரருக்கு லாபத்தில் ஒரு பங்கு கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாலிசிதாரருக்கு ரிவர்ஷனரி போனஸ் கிடைக்கின்றது. அதோடு அவர் உத்திரவாதம் அளிக்கப்பட்ட பெனிபிட்டில் பங்குதாரர் ஆகிறார். அதுபோல் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச காலத்தை பாலிசி நிறைவு செய்யும் போது அவருக்கு இறுதி போனஸ் கிடைக்கிறது.

பிரிமீயம் வெய்வர் பெனிபிட்

இது ஒரு விருப்ப பெனிபிட் ஆகும். இந்த பெனிபிட் பாலிசியுடன் சேர்ந்து வருகிறது. இந்த பெனிபிட்டைப் பெற வேண்டும் என்றால் இதற்கென்று தனியாக பிரிமீயத் தொகையைக் கட்ட வேண்டும்.

பாலிசி முடிவுறும் காலம்

ஜீவன் கிஷோர் பாலிசி ஒரு நீண்ட காலத் திட்டம் ஆகும். எனினும் நாம் விரும்பும் போது இந்த பாலிசியை நிறைவு செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC Jeevan Kishore: A good plan to cover children | உங்கள் பட்டுக்குட்டிகளுக்காக எல்ஐசி ஜீவன் கிஷோர்

LIC Jeevan Kishore is an endowment plan from LIC, which is available for children who are less then 12 years old. The policy may be purchased by any of the parent/grand parent.
Story first published: Monday, May 20, 2013, 16:59 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns