
(How to update your aadhaar card information online?)
கடன் அறிக்கையில் உள்ள தவறுகளை சிபில் இன் உதவியோடு சுலபமாக சரி செய்து விடலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்:
a) உங்கள் சிபில் கடன் அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
b) அதிலுள்ள தவறுகளை கண்டுபிடியுங்கள்
c) உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, கண்ட்ரோல் எண் மற்றும் தவறின் வகை ஆகியவற்றை சிபில் இன் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். இதனை 'டிஸ்ப்யூட் ரெக்குவெஸ்ட் (சிக்கலை நிவர்த்தி செய்யும் கோரிக்கை) என்று கூறுவர்.
கண்ட்ரோல் எண் என்பது சிபில் கடன் அறிக்கையில் வலது உச்சியில் காணப்படும் தனித்தன்மை பெற்ற 9 இலக்க எண்ணாகும். ஒவ்வொரு முறை கடன் அறிக்கை தயாரிக்கப்படும்போது இந்த எண்ணும் புதிதாக உண்டாகும். இந்த எண்ணை அலுவலகத்தில் கொடுப்பது ரொம்ப முக்கியம். இதை வைத்து தான் எந்த கடன் அறிக்கையின் மீது நீங்கள் டிஸ்ப்யூட் கோரிக்கை விடுத்திருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும்.
தவறான தற்போதய இருப்பு அல்லது தவணை கடந்த நிலுவை:நீங்கள் சிபில் கடன் அறிக்கையை பெற்றப்பின் நீங்கள் சமீபத்தில் செலுத்திய பணம் பதிவு செய்யப்படமால் போனதால், தற்போதய கடன் இருப்பு அல்லது தவணை கடந்த நிலுவை அதில் தவறாக பிரதிபலித்திருப்பதை கண்டுபிடித்திருக்கலாம். உங்கள் நிலுவை பணத்தை செலுத்திய 45 நாட்களுக்குள் உங்கள் சிபில் கடன் அறிக்கையை பெற்றிருந்தால் இந்த தவறு நடக்க வாய்ப்புள்ளது. கடனுதவி கொடுத்தவர்கள் சிபில்லுக்கு மாதம் ஒரு முறை தான் கடன் தகவல்களை அனுப்பி வைப்பர். அதனால் உங்கள் சமீபத்தில் செலுத்திய கடன் தவணை பற்றிய தகவல் சிபில் கடன் அறிக்கையில் வருவதில்லை.
இந்த தவறினால், உங்களின் தற்போதய கடன் இருப்பு அதிகமாக இருந்தால், உங்களுக்கு கடன் தொகை அதிகமாக இருப்பதை போன்ற பிம்பத்தை உருவாக்கும். அதே போல உங்களின் தவணை கடந்த நிலுவை நீங்கள் ஒழுங்காக பணத்தை திருப்பி செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையை இழக்கச் செய்யும். இந்த இரண்டுமே உங்களுக்கு வர வேண்டிய கடனுதவியை நிராகரிக்கச் செய்யும்.


Click it and Unblock the Notifications