
( Is income from mutual funds taxable? )
என்ஆர்இ வங்கிக் கணக்கில் சேமித்த பணத்திலிருந்து பெறப்படும் வட்டித் தொகைக்கு வரி செலுத்தத் தேவையில்லை. அதோடு வங்கிகள் அந்த தொகையில் டிடிஎஸ்ஸை கழிக்காது. ஆனால் என்ஆர்ஓ கணக்கில் கிடைக்கும் வட்டிக்கு 30 சதவீத நேரடி வரியை வங்கிகளே கழித்துக் கொள்ளும்.
உதாரணமாக, நீங்கள் உங்கள் என்ஆர்ஓ வங்கிக் கணக்கில் தோராயமாக ரூ.1,00,000 வைத்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த என்ஆர்ஓ கணக்கில் இருக்கும் பணத்திற்கு வங்கிகள் 4 சதவீத வட்டியை வழங்குகின்றன.
இப்போது நீங்கள் சேமித்திருக்கும் ரூ.1,00,000 பணத்திற்கு வங்கிகள் 4 சதவீத வட்டியாக ரூ.4000ஐ உங்களுக்கு வழங்குகின்றன. ஆனால் அந்த பணத்தை நீங்கள் வாங்கும் போது அந்த பணத்திலிருந்து 30 சதவீத வரியை அதாவது ரூ.1200ஐ கழித்துவிடுவார்கள்.
அதே சமயம் என்ஆர்இ கணக்கில் நீங்கள் வரி மற்றும் டிடிஎஸ் ஆகியவற்றைச் செலுத்தத் தேவையில்லை. மேலும் நீங்கள் வாழும் நாட்டில் உங்களுக்கு திடீரென்று ஒரு பண நெருக்கடி ஏற்படுகிறது. அப்போது உங்கள் என்ஆர்ஓ வங்கிக் கணக்கிலிருந்து உடனடியாக பணத்தை எளிதாக அனுப்ப முடியாது. ஏனெனில் அதற்கு ஏராளமான விதிமுறைகள் உள்ளன.
ஆனால் என்ஆர்இ கணக்கில் இருக்கும் பணத்தை மிக எளிதாக அனுப்ப முடியும். உதாரணமாக நீங்கள் துபாயில் இருக்கிறீர்கள். அங்கு உங்களுக்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது. இந்த சூழலில், இந்தியாவில் இருக்கும் உங்கள் என்ஆர்இ கணக்கிலிருந்து துபாயில் உள்ள ஒரு வங்கிக்கு பணத்தை அனுப்புமாறு சம்பந்தபட்ட வங்கிக்கு நீங்கள் வேண்டுகோள் விடுத்தால் போதும். உடனே பணம் பரிமாற்றம் ஆகிவிடும். ஆனால் என்ஆர்ஓ கணக்கில் அப்படி செய்ய முடியாது.
எனவே வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் போது என்ஆர்இ வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை அனுப்புவது சிறந்தது. உள்நாட்டில் இருப்பவர்களிடமிருந்து நீங்கள் உங்கள் என்ஆர்ஓ கணக்கிற்கு பணத்தைப் பெறலாம். ஆனால் வெளிநாட்டிலிருந்து பணப் பரிமாற்றம் செய்யும்போது என்ஆர்இ வங்கிக் கணக்கின் மூலம் செய்வதே சிறந்ததாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications