
(Govt banks that offer highest interest rates on FDs)
ஒரு உதாரணம்:
உங்களின் வைப்பு நிதி உங்களுக்கு வட்டியாக 11,000 ரூபாய் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் வங்கி அந்த வட்டியில் இருந்து 1100 ரூபாயை பிடித்துக் கொள்ளும். அதனால் மூலாதாரத்தில் இருந்து 1100 ரூபாய் வட்டி கழிக்கப்படும்.
அந்த வங்கி உங்களுக்கு 1100 ரூபாய்க்கான TDS சான்றிதழைத் தர வேண்டும். உங்கள் வைப்பு நிதியில் இருந்து வருமான வரி கழிக்கப்பட்டது என்றும், அதனை அரசாங்கத்திடம் கட்டப்பட்டது என்றும் இந்த சான்றிதழ் குறிப்பிடும்.
சரி, உங்கள் வருமானம் வருடத்திற்கு 2 லட்ச ரூபாயை தாண்டவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நீங்கள் வருமான வரி கட்டும் வேளையில், இந்த 1100 ரூபாயை திரும்பி பெற்றுக் கொள்ளலாம்.
இந்தக் காலத்தில் எவ்வளவு TDS பிடிக்கப்பட்டிருக்கிறது என்பதை இணையதளத்தில் பார்த்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. இருப்பினும் பல பேருக்கு இணையதளத்தை உபயோகிக்க தெரியாது. அவர்கள் TDS சான்றிதழ் பெற்று அவர்களுடைய வரி கணக்கை கணக்கிட்டு பார்த்துக் கொள்வது நல்லது.
உங்கள் வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு குறையாக இருந்தால், உங்களுக்கு TDS-ஐ கழிக்க விருப்பம் இருக்காது. அப்படி இருந்தால் படிவம் 15G அல்லது 15 H-ஐ சமர்ப்பித்தால், வங்கியோ அலுவலகமோ TDS-ஐ கழிக்க மாட்டார்கள்.
இந்த ஆண்டின் பட்ஜெட்டில் TDS கழிதல் கண்டிப்பாக ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களுக்கும் தேவை என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அதன்படி நீங்கள் 20 லட்ச ரூபாய்க்கு அதிகமாக ஒரு சொத்தை விற்றால் அதற்கு கண்டிப்பாக TDS கட்ட வேண்டும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும், TDS சான்றிதழை வாங்குவது மிகவும் முக்கியம். அதே போல் நீங்கள் கழிப்பவராக இருந்தால், TDS சான்றிதழை கொடுப்பதும் மிகவும் முக்கியம்.


Click it and Unblock the Notifications