மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறீங்களா? இதை முதலில் படிங்க

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறீங்களா? இதை முதலில் படிங்க
சென்னை: இன்றைய காலத்தின் மிகப் பிரபலமான நிதி முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதி முதலீடுகள் இருக்கின்றன. நாளுக்கு நாள் இந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், பெரும்பாலானவர்கள் அவற்றிலுள்ள பல்வேறு திட்டங்களை அறியத் தவறி விடுகிறார்கள். பரஸ்பர நிதி திட்டங்களை வழங்கும் ஒவ்வொரு குழுமமும் பல்வேறு வகைகளைக் கொண்ட திட்டங்களை கீழ்கண்டவாறு முன்னிலைப்படுத்துகின்றன.

அடிப்படை சொத்து (Underlying Asset) - அடிப்படை அல்லது அடித்தள சொத்து என்பது இத்திட்டங்களில் முதலீடு செய்வதற்காக பணம் சேகரிக்கப்படும் இடங்களை குறிக்கிறது. இது சமபங்கு சந்தைகள் (Equity Market) அல்லது கடன் சந்தைகள் (Debt Market) அல்லது இரண்டுமாக இருக்கலாம். சமபங்குளில் முதலீடு செய்யப்பட்ட நிதிகள் சமபங்கு பரஸ்பர நிதிகள் என அழைக்கப்படுகின்றன. நிறுவனங்கள் மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் நிதிகள் கடன் பரஸ்பர நிதிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு முறைகளிலுமே முதலீடு செய்யப்படும் பங்குகள் கலப்பு பரஸ்பர நிதிகள் (Hybrid Mutual Funds) என அழைக்கப்படுகின்றன.

ஒரு பரஸ்பர நிதியில் இருந்து மற்றொரு பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது 'ஃபண்டு ஆஃப் ஃபண்டஸ்' (Fund of Funds) என்று அழைக்கப்படுகிறது. பரஸ்பர நிதிகளுக்கு வரும் இடர்பாடுகள் அதன் அடித்தள சொத்துக்களைப் பொறுத்தே அமைகின்றன. சமபங்கு மற்றும் கடன் நிதிகளில் அவற்றின் இயற்கையான தன்மைப்படி பார்க்கும் போது கடன் பரஸ்பர நிதிகளை விட சமபங்கு பரஸ்பர நிதிகளில் தான் அதிக இடர்பாடுகள் உள்ளன. திறந்த வகையிலான திட்டங்கள் முதலீட்டாளரை எப்பொழுது வேண்டுமானாலும் பங்குகளை வாங்கவும், விற்கவும் அனுமதிக்கின்றன. மூடிய வகை திட்டங்களில் எந்தவொரு முதலீட்டாளரும் முதலில் வழங்கப்பட்ட நிதி முடிந்த பின்னர் நெருங்க முடியாது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எப்போது வேண்டுமானலும் திரும்ப பெறும் வசதியுள்ள இந்த திட்டங்களில் இரண்டாம் நிலை சந்தைகளைச் தவிர வேறு எங்கும் புதிய பங்குகளை வாங்க முடியாது.

பரஸ்பர நிதிகளை திரும்ப பெறும் வழிகள்:

ஒவ்வொரு பரஸ்பர நிதி திட்டமும் லாபப்பங்கு மற்றும் வளர்ச்சி என இரண்டு வழிமுறைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன.

லாபப்பங்கு வழிமுறையில் அந்த நிறுவனத்தின் மூலம் கிடைக்கப் பெறும் லாபம் மீண்டும் முதலீடு செய்யப்படாமல் முதலீட்டாளருக்கு கொடுக்கும் முறையாகும். இங்கு முதலீட்டின் மதிப்பு மாறாமலிருக்கும். இந்த திட்டம் தொடர்ச்சியான நிதி ஆதாரத்திற்கு வழி ஏற்படுத்துவதாக இருக்கும். குறைந்த கால அவகாசத்தில் பணம் தேவைப்படும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக இந்த திட்டம் உள்ளது. மேலும், இந்த லாபப்பங்கு திட்டத்தை பயன்படுத்தும் முதலீட்டாளர் தங்களுடைய லாபத்தை விற்பனைக்காக பதிவு செய்திடவும் மற்றும் உண்மையான முதலீட்டு அளவிற்கு ஏற்றபடி அவர்களுடைய முதலீட்டிற்கு வரம்பினை ஏற்படுத்தவும் உதவுகிறது.

நிதிகளில் திரும்பவும் முதலீடு செய்வதன் மூலமாக லாபம் பார்க்க உதவும் திட்டம் தான் வளர்ச்சி வழிமுறை திட்டமாகும். இந்த திட்டத்தில் லாபமாக வரும் நிதியானது பரஸ்பர நிதி பங்குகளாக மாற்றப்பட்டுவிடும். இந்த வழிமுறைகளின் போது முதலீடுகளின் மதிப்பு லாபத்தின் மதிப்பிற்கேற்ப உயர்ந்துவிடும். லாபம் மீண்டும் முதலீடு செய்யப்படுவதால், லாபப்பங்கு வழிமுறையை விட வளர்ச்சி திட்ட வழிமுறை அதிக பயனுள்ள திட்டமாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Things to know before investing in a Mutual Fund | மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறீங்களா? இதை முதலில் படிங்க

Mutual Funds are increasingly becoming a popular investment option. While more and more people are investing in mutual funds, most of us fail to decipher the offerings of various mutual fund schemes. Every Mutual Fund group offers an array of schemes which differ in the above said aspects.
Story first published: Tuesday, May 7, 2013, 18:05 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns