
உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருந்தால் நீங்கள் குடியிருக்கும் வீட்டை தவிர பிற வீடுகளை நீங்கள் வாடகைக்கு விட்டுள்ளதாக கருதப்படுவீர்கள். எனவே, நீங்கள் உங்களுடைய வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், அதற்குரிய வருமானத்தை கணக்கிட்டு அதன் படி வருமான வரி செலுத்த வேண்டும்.
வாடகை வருமானம் கணக்கிடும் முறை, வருமான வரி விதிகளால் பரிந்துரைக்கப்படும் சில மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டது. எனவே விதிகளின் படி நீங்கள் உங்களுடைய இரண்டாவது வீட்டை குத்தகைக்கு கொடுத்திருந்தாலும், அது வாடகை வருமானமாக கருதப்படும்.
இந்தியாவின் இந்த வருமான விதி உங்களுடைய பரம்பரை சொத்துகளுக்கும் பொருந்தும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, உங்களுக்கு ஏற்கனவே ஒரு வீடு இருந்து பரம்பரை சொத்திலிருந்து உங்களுக்கு மற்றொரு வீடு கிடைத்தால் நீங்கள் உங்களுடைய இரண்டாவது வீட்டிற்கான வாடகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும். மேலும், இரண்டாவது வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானம், உங்களுடைய மொத்த வருமானத்தின் ஒரு பகுதியாக கருதப்படும். எனவே, உங்களுக்கு இரண்டாவது வீடு சொந்தமாக இருந்தால் அதற்குறிய வாடகை வருமானத்தை கணக்கிட மறக்க வேண்டாம்.
ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் தன்னுடைய வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாமா?
ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் இந்தியாவில் சொத்து வாங்க மற்றும் அதை வாடகைக்கு விட அனுமதிக்கப்படுகிறார். ஆனால் அந்த வாடகை வருமானத்திற்கு கண்டிப்பாக அவர் வருமான வரி செலுத்த வேண்டும். மேலும், அவருடைய வாடகை வருமானம் அவரின் மொத்த வருமானத்தின் ஒரு அங்கமாக கருதப்படும். எனவே, அவர் தற்பொழுது உள்ள வருமான வரி சட்டத்தின் படி வரி செலுத்த வேண்டும். உதாரணமாக, உங்களுடைய இதர வருமானம் ரூ 2 லட்சம், மற்றும் உங்களுடைய வீட்டை குத்தகைக்கு கொடுத்த வகையில் உங்களுடைய வாடகை வருமானம் ரூ. 2 லட்சம் எனில், நீங்கள் ரூ. 4 லட்சத்திற்கு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியரின் வாடகை வருமானத்தை அவருடைய என்ஆர்ஓ கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications