ஐஐபி என்றால் என்ன?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

ஐஐபி என்றால் என்ன?
சென்னை: இன்று பிரபலமாக ஐஐபி என்று அழைக்கப்படும் தொழில் துறை உற்பத்தி அட்டவணை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான தொழில் துறை உற்பத்தியை குறிக்கிறது.

(Gold rates in major Indian cities on May 22)

ஐஐபி பற்றிய அரசாங்கத்தின் டேட்டா பிரதி மாதமும், அந்த மாதத்தின் மத்தியில் வெளியிடப்படும். உதாரணமாக, ஐஐபியின் மதிப்பு 3 சதவீதம் எனில், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தொழிற்சாலையின் வெளியீடு அல்லது தொழிற்சாலையின் உற்பத்தி 3 சதவீதம் அதிகரித்துள்ளது எனப் பொருள் படும்.

யாருக்காக ஐஐபி டேட்டா?

பொதுவாக இந்திய பங்குச் சந்தையின் முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் ஐஐபியின் டேட்டாக்களை தொடர்ந்து கண்காணிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் காலை 11 மணிக்கு வெளியிடப்படும் ஐஐபி டேட்டா பங்குச் சந்தையின் போக்கையே திசை திருப்புகின்றது. ஒரு நல்ல ஐஐபி டேட்டா பங்குச் சந்தைகளில் நல்ல உணர்வுகளை உண்டாக்குகிறது. தொழில்துறை உற்பத்தி திறன் அதிகரித்தால், நிறுவனங்களுக்கு நல்ல லாபம் என்று பொருள். எனவே நிறுவனங்களின் லாபம், பங்குச் சந்தையில் அதன் பங்குகளின் விலை உயர வழி வகுக்கிறது.

எவ்வாறு ஐஐபி டேட்டாவை கணக்கிடுவது?

தற்போது, தொழில்துறை உற்பத்தி குறியீட்டு குறிப்பு 1993-94ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. மேலும், மொத்த தொழில் துறை வெளியீடு மதிப்பு குறைந்தது ரூ. 80 கோடியாகவும் மற்றும் மொத்த மதிப்பில் குறைந்தது ரூ. 20 கோடி மதிப்பு கூட்டப்பட்டதாகவும் உள்ள பொருட்கள் மட்டுமே ஐஐபியை கணக்கிட பயன் படுத்தப்படுகின்றன. ஐஐபி கணக்கீடில் உற்பத்தி, சுரங்கம், மற்றும் மின்சாரம் உட்பட 3 அடிப்படை பிரிவுகள் உள்ளன. ஐஐபி பயன்பாட்டுப் பொருட்களின் அடிப்படையில் மூலதன பொருட்கள், அடிப்படை பொருட்கள், அடிப்படை அல்லாத பொருட்கள், நுகர்வோர் மற்றும் நுகர்வோர் அல்லாத பயன்பாட்டுப் பொருட்கள் என வகைப்படுத்தப்படுகின்றது.

ஐஐபியின் டேட்டா மத்திய ரிசர்வ் வங்கியால் தொழில்துறை மேம்பாட்டை கணக்கிட உதவும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இது ரிசர்வ் வங்கிக்கு வட்டி விகிதம் குறைப்பு போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க உதவுகிறது. எடுத்துக்காட்டாக தொழில் துறையின் வீழ்ச்சி, ரிசர்வ் வங்கியை வட்டி விகிதங்களை குறைப்பதற்கு தூண்டும்.

ஐஐபியின் டேட்டா 16 துறைகளில் இருந்து பெறப்படும் தகவல்கள் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அந்த 16 துறைகளாவன: சுரங்க இந்திய பணியகம்; மத்திய மின்சார ஆணையம், கூட்டு தாவர குழு; பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், டெக்ஸ்டைல் ​​கமிஷனர் அலுவலகம்; கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறை; சர்க்கரை இயக்குநரகம்; உரங்கள் துறை; தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு (டிஐபிபி) துறை இயக்குனரகம்; வனஸ்பதி, காய்கறி எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள் இயக்குனரகம்; தேயிலை வாரியம்; சணல் ஆணையாளர் அலுவலகம்; நிலக்கரி கட்டுப்பாட்டாளர் அலுவலகம்; ரயில்வே வாரியம், உப்பு ஆணையர் மற்றும் காபி வாரியம் அலுவலகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is IIP? | ஐஐபி என்றால் என்ன?

Index for Industrial production, more popularly known as the IIP, denotes the industrial production during a period. Government data on IIP is released every month, more towards the first half of the month. For example, if the IIP is 3 per cent, then factory output or factory production has grown by 3 per cent, compared to the previous month.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns