வட்டி விகிதங்கள் குறைந்து வரும் இந்நேரத்தில் எந்த ஒரு வங்கியும் ஆண்டிற்கு 10 சதவீதத்திற்கு மேல் வட்டி வழங்கத் தயாராக இல்லை. இந்திய ரிசர்வ் வங்கி மேலும் வட்டி விகிதங்களை குறைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் இந்த நிலையில் அதிக வட்டி தரும் நிரந்தர வைப்பு நிதிகளைப் பற்றி இங்கே குறிப்பிடுகின்றோம். இந்த வைப்பு நிதிகள் அதிக வட்டியை தருவதுடன் மிகவும் பாதுகாப்பனதும் ஆகும்.
(How the falling rupee will leave you poorer?)
மஹிந்திரா பைனான்ஸின் சம்ருதி
மஹிந்திரா பைனான்ஸ் நம் நாட்டின் மிகப்பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் 2011-12 ம் ஆண்டிற்கான நிகர லாபம் ரூ 620 கோடியாகும். இதன் வைப்பு நிதிக்கு CRISIL, "FAAA" மதிப்பளித்துள்ளது. அதாவது இந்த நிறுவனத்தில் செய்யப்படும் முடலீடு மற்றும் வட்டி போன்றவை மிகவும் பாதுகாப்பானது என CRISIL சான்றளித்துள்ளது. இந்த நிறுவனம் மூன்றாண்டுகளுக்கான நிரந்தர வைப்பு நிதிக்கு சுமார் 10.25 சதவீத வட்டி வழங்குகிறது. கூட்டு வட்டியான இது இறுதியில் சுமார் 11.34 சதவீத பயன்களை தருகிறது. இந்நிறுவனம் மூத்த குடிமகன்களுக்கு கூடுதலாக 0.25 சதவீத வட்டி வழங்குகிறது.
ஸ்ரீராம் போக்குவரத்து நிறுவனத்தின் உன்னதி
ஸ்ரீராம் போக்குவரத்து நிறுவனம் நாட்டின் மிக பெரிய வர்த்தக வாகன நிதி நிறுவனம் ஆகும். இந்த நிறுவன வைப்பு நிதிக்கு CRISIL, "FAA+/நிலையானது" என தரச் சான்றும், ICRA, "MAA+/நிலையானது" என தரச் சான்றும் வழங்கியுள்ளன. இந்த நிறுவனம் மூன்றாண்டுகளுக்கான நிரந்தர வைப்பு நிதிக்கு சுமார் 10.75 சதவீத வட்டி வழங்குகிறது. கூட்டு வட்டியான இது இறுதியில் சுமார் 11.94 சதவீத பயன்களை தருகிறது. இந்நிறுவனம் மூத்த குடிமகன்களுக்கு கூடுதலாக 0.25 சதவீத வட்டி வழங்குகிறது.
திருமலை கெமிக்கல்ஸ்
திருமலை கெமிக்கல்ஸ் 40 வருடங்களாக பல்வேறு இரசாயன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் டிச்ம்பர் 2012 முடிய உள்ள 9 மாதங்களுக்கு ரூ 30 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இந்த நிறுவனம் 2 வருட நிரந்தர வைப்பு நிதிக்கு சுமார் 11 சதவீத வட்டி வழங்குகிறது.
சூர்யா ரோஷ்னி
சூர்யா ரோஷ்னி கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரு இலாபகரமான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 3 ஆண்டு கால நிரந்தர வைப்பு நிதிக்கு சுமார் 12 சதவீத வட்டி வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications