சென்னை: எதிர்பார்த்ததைவிட அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் அதிக அளவில் அதிகரித்திருப்பதால், இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது. அதன் மூலம் ஒரு சில இந்திய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. எனவே பின் வரும் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.
ஐடிபிஐ(IDBI) வங்கி
ஐடிபிஐ வங்கி ஒரு பிஎஸ்யு(PSU) வங்கியாக இருந்தாலும், இந்த வங்கி சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த வங்கி சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் இன்னும் சரியாகச் செயல்படுவதில்லை என்று பலர் கவலை தெரிவித்ததால், கடந்த 52 வாரங்களாக இந்த வங்கியின் ஒரு பங்கின் விலை ரூ.78ஆக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது இந்த வங்கின் பங்குகளை வாங்கினால் அதற்காக டிவிடன்ட் தொகையாக ஒரு பங்குக்கு ரூ.3.5 பெறுவீர்கள். இந்த தொகை உங்கள் டிவிடன்ட் தொகைக்கு 5 சதவீத அதிகரிப்பைத் தரும்.
என்எம்டிசி(NMDC)
என்எம்டிசியின் பங்குகளின் விலையும் அதாள பாதாளத்தில் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இதன் ஒரு பங்கின் விலை ரூ.113ல் இருந்தது. என்எம்டிசி ஒரு கடன் இல்லாத நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ரூ.19,000க்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருக்கிறது. இந்த நிலையில், இந்த நிறுவனம் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கத் திட்டமிட்டிருக்கிறது. அதனால் இதன் பங்குகளின் மதிப்பு பெருமளவு உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் இந்த நிறுவனம் வைத்திருக்கும் இரும்பு சுரங்கங்களும் அதிக லாபத்தைத் தருகின்றன.
ரிலையன்ஸ் தொழில்சாலை(RELIANCE)
கடந்த சில மாதங்களாக மிகவும் குறைந்த மதிப்பைக் கொண்டிருந்த தனது பங்குகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது நல்ல மதிப்பை வழங்குகிறது. சில்லறை வணிகத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியைக் கண்டு, வரும் 3 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடியை ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்ய இருக்கிறது. அதுபோல் இன்னும் சில மாதங்களில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்பலாம்.
பிஎச்இஎல்(BHEL)
கட்டுமானத்துறை மற்றும் மின்துறை ஆகியவற்றை மேம்படுத்த இந்தியாவின் நிதியமைச்சரான சிதம்பரம் உறுதியளித்திருக்கிறார். அதனால் பிஎச்இஎல் போன்ற நிறுவனங்கள் என்எம்டிசி நிறுவனத்தைப் போன்று கடனில்லாமல் அதிக பணத்தைப் பெறும் என்று நம்பலாம். இதன் மூலம் பிஎச்இஎல் நிறுவனத்தின் பங்குகளின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications