சமீபத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகள் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய பங்குகளை தற்போது வாங்கினால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்று பங்குச்சந்தை வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். பங்குகளில் சரிவு ஏற்பட்டிருக்கும் ஒரு சில வங்கிகளைப் பற்றி கீழே பார்க்கலாம்.
ஐடிபிஐ வங்கி
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஐடிபிஐ வங்கியின் பங்குகளில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டு, இந்த வங்கியின் ஒரு பங்கின் விலை ரூ.69 அளவிற்கு குறைந்திருக்கிறது. அரசினால் சிறப்பாக நிர்வகிக்கப்படும் வங்கி என்று அழைக்கப்படும் ஐடிபிஐ வங்கியின் பங்குகள் அதனுடைய முக மதிப்பிற்கு 0.5க்கு குறைவாக கிடைக்கிறது. இந்த வங்கிகயின் பங்குகளை இப்போது வாங்கினால், அதன் ஒரு பங்கிற்கு டிடிவிடன்ட் தொகையாக ரூ.3.5 கிடைக்கும்.
அலகாபாத் வங்கி
அலஹாபாத் வங்கியின் பங்குகளின் விலையும் கடந்த 2 ஆண்டுகளை விட மிகவும் குறைவாக இருக்கிறது. அதாவது இந்த வங்கியின் ஒரு பங்கின் விலை ரூ.93க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு பங்கின் முக மதிப்பிற்கு 0.4க்கு குறைவாக கிடைக்கிறது. அலகாபாத் வங்கியின் பங்குகளை தற்போது வாங்கினால் அது எதிர்காலத்தில் நல்ல வருமானத்தைத் தரும் என்று நம்பலாம்.
விஜயா வங்கி
மற்ற அரசு வங்கிகளைப் போலவே விஜயா வங்கியின் பங்குகளும் பெரும் அளவு சரிந்திருக்கிறது. தனது சொத்துக்களை அதிகரிப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வதில் விஜயா வங்கி சிறந்து விளங்குகிறது. தற்போது இந்த வங்கியின் ஒரு பங்கின் முக மதிப்பிற்கு 0.50க்கு குறைவாக கிடைக்கிறது.
ஆந்திரா வங்கி
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆந்திரா வங்கியின் பங்குகளில் கடும் சரிவு ஏற்பட்டு, தற்போது அந்த வங்கியின் ஒரு பங்கு ரூ.78.25க்கு விற்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியின் பங்குகளை வாங்கினால், ஒரு பங்கிற்கு டிவிடின்ட் தொகையாக ரூ.5 கிடைக்கும்.
தேனா வங்கி
தேனா வங்கியின் பங்குகளின் விலையும் பெரிய அளவில் சரிந்திருக்கிறது. இந்த வங்கியின் பங்குகளில் முதலீடு செய்தால் 3 மடங்கு வருமானம் கிடைக்கும்.
More From GoodReturns

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications