வருமான வரியை தாக்கல் செய்யும் பொழுது தவிர்க்க வேண்டிய தவறுகள்!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வருமான வரியை படிவங்களை தவறு இல்லாமல் தாக்கல் செய்வது என்பது வருமான வரி தாக்கல் செய்வதை விட மிக முக்கியமானது. இல்லையெனில் பிற்காலத்தில் வருமான வரி அலுவலகத்திற்கு விளக்கங்கள் கேட்டு படையெடுக்க வேண்டியிருக்கும்.

 

இந்த கட்டுரையை தொடங்குவதற்கு முன் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறோம். ஆண்டு மொத்த வருமானம் ரூ 5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், கண்டிப்பாக ஆன்லைனில் வரி தாக்கல் செய்ய வேண்டும்.

ஐடிஆர்-வி(ITR-V) ஐ தபாலில் அனுப்புவது

ஐடிஆர்-வி(ITR-V) ஐ தபாலில் அனுப்புவது

வருமான வரியை ஆன்லைனில் தாக்கல் செய்த பின் வருமான வரி விபரங்களை(ஐடிஆர்-வி) பெங்களூரில் உள்ள வருமான வரி அலுவலகத்திற்கு தபாலில் அனுப்ப வேண்டும். அதன் பிறகே உங்களுடைய வருமான வரித் தாக்கல் முழுமையாக முடிவடையும். மேலும், ஆன்லைனில் தாக்கல் செய்த 120 நாட்களுக்குள் தபாலில் ஐடிஆர்-வி ஐ அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வரிவிலக்கு

வரிவிலக்கு

வருமான வரித்துறையிடம் நீங்கள் பெறும் உண்மையான வருமானத்தை மறைப்பது தவறு. பல்வேறு ஆதாரங்களில் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரித்துறை விரிவிலக்கு அளிக்கிறது, இதனை பயன்படுத்தி வரிவிலக்கு பெறலாம்.

உதாரணமாக நீண்ட கால ஆதாயம், டிவிடண்ட் போன்ற வருமானங்களுக்கு எந்தவிதமான வரியும் செலுத்த வேண்டியது இல்லை. ஆனாலும் அதைப் பற்றி அவர்களுக்கு தெரிவிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

கடைசி நிமிடம்
 

கடைசி நிமிடம்

கடைசி நிமிடத்தில் தாக்கல் செய்வதை கண்டிப்பாக தவிக்க வேண்டும். ஏனெனில் கடைசி நேரத்தில் மெதுவான சர்வர்கள், தவறான விபரங்களை செய்வது, போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும். மேலும் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலும் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ம் தேதியே அபராதம் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியாகும். வருமான வரித் துறை தேதியை நீட்டித்தால் அதைப் பற்றிய விபரங்களை வெளியிடும்.

தவறான வங்கி விவரங்கள்

தவறான வங்கி விவரங்கள்

வங்கி விவரங்களை சரியாக் குறிப்பிட்டிருக்கிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் திரும்பக் கிடைக்கும் தொகை காசோலையாகவோ அல்லது மின்னணு பரிமாற்றமாகவோ அனுப்பப் படும். தவறாக வங்கி விவரங்களை குறிப்பிட்டால் பணம் திரும்பக் கிடைக்காது.

தரவுகளின் தவறுகள்

தரவுகளின் தவறுகள்

தனிப்பட்ட தரவுகளான பிறந்த தேதி மற்றும் பான் கார்ட் எண் போன்றவற்றை எவ்வித தவறுகள் இல்லாமல் நிரப்புங்கள்.

சரிபார்க்காமல் தாக்கல் செய்வது

சரிபார்க்காமல் தாக்கல் செய்வது

எந்த முறையில் வருமான வரி தாக்கல் செய்தாலும் அதில் சில தவறுகள் இடம் பெறுவது இயற்கையே. எனவே வருமான வரி தாக்கல் படிவத்தை ஒரு முறைக்கு இரு முறை படித்து பார்த்து பிழைகளை தவிர்த்து விடுங்கள். வரி ஆலோசகர் அல்லது கணக்காளர் வருமான வரியை தாக்கல் செய்தாலும், அதை ஒரு முறை சரி பார்க்க வேண்டும். ஏனெனில் வரி தாக்கல் சம்பந்தமான பொறுப்பு உங்களைச் சார்ந்தது.

படித்து பயன்பெறவும்..

படித்து பயன்பெறவும்..

வரிப் பணத்தைச் சேமிக்க இங்கே பல வழிகள் உண்டு!

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 mistakes to avoid while filing tax returns

It's important to avoid mistakes while filing of tax returns, or else you could be running around to the IT department for clarifications at a future date. To begin with, remember that you have to file tax returns online, if your income exceeds Rs 5 lakhs. Here are a few mistakes you can avoid.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X