
வைப்பு நிதி என்பது வங்கியால் அளிக்கப்பட்டு, நாம் செலுத்திய பணத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்கு குறிப்பிட்ட அளவு வட்டி அளிக்க உறுதி செய்வதே என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பிட்ட காலத்திற்கு பின், அசலுடன் சேர்ந்து மொத்த வட்டியும் வங்கியால் திருப்பி தரப்படும். இதனை பற்றி விலாவரியாக பார்க்கலாம்.
கடன் நிதி என்றால் என்ன?
கடன் நிதி என்பது மியூச்சுவல் ஃபண்ட் தான். முதலீடு செய்யும் பணம் பிரிக்கப்பட்டு பல பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உங்களுக்கு நிரந்தர வருமானத்தை ஈட்டித் தரும். முதலீடு செய்யப்படும் பங்குகள் பொதுவாக மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தின் கடன் பத்திரங்கள், நிதி பற்றுகளில், அரசாங்க பிணையம், அதிக நம்பகத்தன்மையுள்ள கார்போரேட் மாற்றமுடியாத கடனியங்கல் (Non Convertible debentures) ஆகிவற்றில் தான் பிரித்து முதலீடு செய்யபடும். இவை அனைத்தும் அவ்வளவு எளிதில் நஷ்டம் ஆக முடியாத அரசாங்கம் மற்றும் மிகவும் நம்பகத்தன்மையுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதால் இந்த வகை முதலீடு பாதுகாப்பாக கருதப்படுகிறது.
மற்ற மியூச்சுவல் ஃபண்டை போல, திறந்த முனையுடைய ஃபண்ட்களில் சில யூனிட்களை தினசரி நிகர சொத்து மதிப்பை (NAV) பொறுத்து வாங்கலாம்.
கடந்த ஐந்து வருடங்களாக வைப்பு நிதி 6 முதல் 10 விழுக்காடு வரை தான் ஈட்டுத் தொகையை அளிக்கிறது. நன்றாக செயல்படும் சில கடன் நிதிகள் கடந்த ஐந்து வருடங்களாக என்ன ஈட்டுத் தொகையை தந்திருக்கிறது என்பதை பார்க்கலாம். நிதி நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஐந்து கடன் நிதிகளை ஒப்பிடுவதற்காக தேர்ந்தெடுத்திருக்கின்றோம்.
சராசரியாக கடந்த ஐந்து வருடங்களாக கடன் நிதிகளில் இருந்து வருமான வரி பிடித்தல் இல்லாமல் 11.75% ஈட்டுத் தொகையாக கிடைக்கிறது. இதுவே வைப்பு நிதியில் வருமான வரி பிடித்தல் இல்லாமல் 9-10% தான் ஈட்டுத் தொகையாக கிடைக்கிறது. இன்னும் 15 வருடங்களுக்கு கடன் நிதியும் வைப்பு மிதியும் ஒரே அளவு தான் ஈட்டுத் தொகையை (9%) தரப்போகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படி பார்த்தாலும், உச்ச வரம்பில் (20% மற்றும் 30%) வருமான வரி கட்டுபவர்களுக்கு, வரி பிடித்தல் போக கடன் நிதியில் தான் அதிக ஈட்டுத் தொகை கிடைக்கும்.
கடன் நிதியில் சிறிதளவு ரிஸ்கும், சிறிய கட்டணங்கள் இருந்தாலும், இடர்பாடை பற்றி அதிகம் கவலைப்படாத முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். இதில் நல்ல வரி பயன் இருப்பதால், வருமான வரி பிடித்தல் போகவும் நல்ல ஈட்டுத் தொகையை திருப்பி கொடுக்கும். அதனால் முக்கியமாக அதிக வரி உச்ச வரம்பில் உள்ளவர்கள் கண்டிப்பாக இதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications