சென்னை: இதுவரை பங்குச் சந்தையைப் பற்றி தெரியாதவர்கள், புதிதாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடிவெடுத்துவிட்டால் அவர்கள் செய்ய வேண்டிய முதல் முக்கிய காரியம் மிகச் சரியான பங்குச் சந்தை முகவரைச் தேர்ந்தெடுப்பதாகும். நல்ல முகவர்களைத் தேர்ந்தெடுக்க இந்த கட்டுரை உங்களுக்கு கண்டிப்பாக உதவும்.
முகவர் பணி
பங்குச் சந்தை முகவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக, அந்நிறுவனங்களின் பணி அமைப்பைப் பார்க்க வேண்டும். ஒரு சில நிறுவனங்கள் பங்குகளை பரிவர்த்தனை செய்ய 0.01 சதவீத கமிசனைப் மட்டுமே பெறுவார்கள். ஒரு சில நிறுவனங்கள் 0.10 சதவீத கமிசனைப் பெறுவனார்கள்.
குறிப்பாக வங்கிகள் நடத்தும் முகவர் பணி செய்யும் நிறுவனங்கள் 10 மடங்கு அதிகமான கமிசனைப் பெறுவார்கள். எனினும் அவர்கள் அதிகமாக பணம் வாங்குவதற்காக, அவர்கள் அதிகமான வேலைகளைச் செய்யப் போவதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
சேவைகள்
ஒரு சில நிறுவனங்கள் மிகச் சிறந்த சேவைகளை வழங்குவார்கள். குறிப்பாக வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் சிறந்த சேவை செய்வார்கள். குறிப்பாக ஜியோஜிட், ஷேர்கான் மற்றும் யுனிகான் போன்ற நிறுவனங்கள் இத்தகைய சேவைகளை வழங்குகின்றன.
இந்த நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் அனுப்பி, வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் மற்ற எல்லா சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை வரை செய்ய உதவி செய்வார்கள். வாடிக்கையாளர்கள் தங்கள் கையொப்பத்தை இட்டால் போதும். மற்ற எல்லா நடவடிக்கைகளையும் அந்தந்த நிறுவனங்களின் பணியாளர்களே பார்த்துக் கொள்வார்கள்.
ஆய்வுக்கான வசதி
பெரும்பாலான பங்குச் சந்தை முகவர் நிறுவனங்கள், ஆய்வு செய்வதற்கான வசதிகளை வழங்குகின்றன. எனினும் பல நிறுவனங்கள் இத்தகைய வசதிகளை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை.
புதிதாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்றால், பங்குச் சந்தையைப் பற்றிய ஆய்வு மற்றும் குறிப்புகள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே பங்குச் சந்தையப் பற்றிய ஆய்வு அறிக்கையை அனுப்பும் முகவர் நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும்.
பங்கு வர்த்தக சாஃப்ட்வேரை சரிபார்த்தல்
பல பங்குச் சந்தை முகவர் நிறுவனங்கள் மிகவும் குழப்பமான பங்கு வர்த்தக சாஃப்ட்வேரை வைத்திருக்கின்றன. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த சாஃப்ட்வேருக்குள் சென்றால் குழப்பம்தான் ஏற்படும். எனவே முதலில் மிகவும் எளிமாயான சாஃப்ட்வேரை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அந்த சாஃப்ட்வேரை உங்களுக்கு மிக விரைவில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.
முவர் சேவை மையங்கள்
பங்குப் பரிவர்த்தனைகள் எல்லாமே, எலக்ட்ரானிக் சேவைகள் மூலம் செய்யப்படுவதால், முவர் சேவை மையங்கள் உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே சிறந்த முகவரை தேர்ந்தெடுத்து நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications