வட்டி விகிதமும் இஎம்ஐயும் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வட்டி விகிதமும் இஎம்ஐயும் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
லோன் வாங்க முடிவு செய்து இருக்கிறீர்களா? அதற்கு முன்பாக, நீங்கள் வாங்கும் லோன் தொகை எவ்வாறு மாதத் தவணைகளாகப் பிரிக்கப்பட்டு, அதற்கு எவ்வாறு வட்டி விதிக்கப்படுகிறது என்பதை தெரிந்து வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும்.

(IOC stops supply of LPG cylinders to non-KYC consumers)

உதாரணமாக ஆண்டுக்கு 18 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.2 லட்சம் லோன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த லோனை 3 வருடங்களில் கட்டி முடிக்க உறுதி அளித்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தற்போது ரூ.2 லட்சத்திற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.7230 வீதம் 36 மாதங்களுக்குச் செலுத்த வேண்டும். அதாவது நீங்கள் வாங்கிய ரூ.2 லட்சத்திற்கு 36 மாதங்களில் ரூ.2,60,280 செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்தும் ரூ.7,230ல் வட்டியும் அதோடு நீங்கள் வாங்கிய கடனில் ஒரு சிறு பகுதியும் அடங்கி இருக்கிறது. தொடக்க மாதங்களில் வட்டி விகிதம் சற்று அதிகமாகவும், லோன் தொகை சற்று குறைவாகவும் இருக்கும். அதாவது முதல் மாதத்தில் ரூ.3000 வட்டியும், ரூ.4230 லோன் தொகையும் செலுத்த வேணடும்.

ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்த வேண்டிய லோன் தொகை மற்றும் வட்டி விகிதத்தைக் கீழே பார்க்கலாம்.

முதல் மாதம் வட்டி ரூ.3000 மற்றும் லோன் தொகை ரூ.4200
2வது மாதம் வட்டி ரூ.2936 மற்றும் லோன் தொகை ரூ.4294
6வது மாதம் வட்டி ரூ.2673 மற்றும் லோன் தொகை ரூ.4557
12வது மாதம் வட்டி ரூ.2247 மற்றும் லோன் தொகை ரூ.4983
15வது மாதம் வட்டி ரூ.2012 மற்றும் லோன் தொகை ரூ.5211

மேற்சொன்ன உதாரணத்திலிருந்து, தொடக்க மாதங்களில் அதிகமான வட்டியையும் அதே நேரத்தில் குறைவான லோன் தொகையையும் கட்ட வேண்டும் என்பதைப் பார்க்கலாம். சில மாதங்களுக்குப் பிறகு, லோன் தொகை அதிகமாகவும், வட்டி குறைவாகவும் இருப்பதையும் பார்க்கலாம்.

எனவே லோன் வாங்கிய சில மாதங்களுக்குப் பின்பு உங்கள் லோனை திருப்பிச் செலுத்த விரும்புகிறீர்கள் என்றால், தொடக்க மாதங்களில் நீங்கள் லோனுக்கான வட்டியை மட்டுமே செலுத்தியிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இஎம்ஐ எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

இஎம்ஐ என்பது லோன் தொகையையும் மற்றும் வட்டி விகிதத்தையும் உள்ளடக்கி இருக்கிறது. தொடக்க மாதங்களில் வட்டி விகிதம் அதிகமாக இருந்து போகப் போக அது குறைந்து கொண்டே வரும். வட்டி விகிதம், லோன் தொகை மற்றும் லோன் திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் ஆகியவற்றைப் பொருத்தே இஎம்ஐ கணக்கிடப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How is interest and principal divided in an EMI?

Looking to take a loan? It's extremely important to understand the concept of how your equated monthly installment is divided between your interest and principal repayment.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X