சென்னை: முதலீடு எந்த ஒரு இடர்பாடும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து நிரந்தர வைப்பு தொகையில் முதலீடு செய்தவரா நீங்கள்? இதோ இந்த முதலீட்டினால் கிடைக்கப் போகும் ஈட்டுத் தொகையை அதிகரிக்கும் வழிகள்!!, உங்களுக்காக.
நிறுவன வைப்பு நிதி:
பணத்தை வங்கி வைப்பு தொகையில் முழுவதுமாக முதலீடு செய்திருந்தால், சிறிது பணத்தை எடுத்து நிறுவன வைப்பு தொகையிலும் முதலீடு செய்ய வேண்டும்.
அதிக லாபம்:
ஏனென்றால் இதில் அதிக ஈட்டுத் தொகை கிடைக்கும். இருப்பினும் பணத்தை ஏதாவது ஒரு நிறுவன வைப்பு தொகையிலோ அல்லது கேள்வி படும் அனைத்து நிறுவன வைப்பு தொகையிலோ முதலீடு செய்யக் கூடாது. எது பாதுகாப்பான ஒன்றாக தோன்றுகிறதோ அதனை தேர்ந்தெடுங்கள். உதரணத்திற்கு அரசு சார்ந்த வங்கிகள் 2-5 வருட வைப்பு தொகைக்கு அதிகபட்சமாக 9.25% வட்டி அளிக்கின்றன. இதுவே கேரளா அரசாங்கத்திற்கு சொந்தமான கேரளா சாலை போக்குவரத்து நிதி திட்டம், நிறுவன வைப்பு நிதிக்கு 10.25% வட்டி அளிக்கிறது. அதே போல், மஹிந்திரா நிதியின் நிரந்தர வைப்பு 10%க்கும் அதிகமாக அளிக்கிறது.
நீண்ட கால முதலீடு:
இன்றைய வட்டி விகிதப்படி, நீண்ட நாட்கள் முதலீட்டில் ஈடுபடுவதே சிறந்தது. இதற்கு காரணம் இன்றைய பொருளாதாரத்தில் வட்டி விகிதம் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பணத்தை அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்திருந்தால் அது பாதுகாப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications