ஆன்லைன் மூலம் வருமானவரி தாக்கல் செய்ய இணையதள வசதிகள்

ஆண்டிற்கு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பெரும் இந்தியக் குடிமக்கள் கண்டிப்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசுக்கு வருமானவரி செலுத்த வேண்டும்.

வருமானவரித் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் வெகு வேகமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமானோர் இந்திய வருமானவரித் துறையின் இணையதள முகவரி மூலம் வருமானவரித் தாக்கல் செய்வதால் அந்த இணையதள முகவரி செயலற்ற நிலையில் இருக்கிறது. எனவே அதற்கு மாற்றாக வேறு சில இணையதள முகவரிகளை வருமானவரித் துறை பரிந்துரை செய்திருக்கிறது.

மேலும் வாடிக்கையாளர் சேவை மையங்களையும் ஏற்படுத்தி, வருமானவரி செலுத்துபவர்களுக்கு வருமானவரித் துறை உதவி செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் வரித் தாக்கல் செய்ய வருமானவரித் துறை பரிந்துரை செய்திருக்கும் இதர இணையதள வசதிகளை கீழே பார்க்கலாம்.

கிளியர் டாக்ஸ்(Clear Tax)

கிளியர் டாக்ஸ்(Clear Tax)

இ-பைலிங் செய்வதற்கு, கிளியர் டாக்ஸ் என்ற இணைய தளத்திற்கு மத்திய அரசு அதிகாரம் அளித்திருக்கிறது. வருமானவரித் தாக்கல் செய்பவர்கள் இந்த இணையதள முகவரியை மிகவும் எளிதாகப் பயன்படுத்தி, தங்கள் வருமானவரி அறிக்கையைத் தாக்கல் செய்யலாம்.

மிகவும் எளிமையான 5 வழிமுறைகளைப் பின்பற்றி இந்த இணையதள முகவரியில் வருமானவரியைத் தாக்கல் செய்ய முடியும். ஆனால் தனி நபர் வருமானவரித் தாக்கல் செய்ய ரூ.249 மற்றும் நிறுவனம் வருமானவரித் தாக்கல் செய்ய ரூ.749 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்த இணைய தளத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால், பெண்கள் இந்த இணையதள முகவரி மூலம் இலவசமாக தங்கள் வருமானவரி அறிக்கையைத் தாக்கல் செய்யலாம்.

 

 

டாக்ஸ் ஸ்மைல்(Tax Smile)

டாக்ஸ் ஸ்மைல்(Tax Smile)

டாகஸ் ஸ்மைல் இணையதளமும் இந்திய அரசால் ஒப்புதல் பெற்ற இணையதளம் ஆகும். இந்த இணையதளம் மூலமாக, தனி நபர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமானவரி அறிக்கையைத் தாக்கல் செய்யலாம்.

இந்த இணையதளத்தில் டாக்ஸ் ஸ்மைல் சில்வர், டாக்ஸ் ஸ்மைல் கோல்டு மற்றும் டாக்ஸ் ஸ்மைல் ப்ரீமியம் என்ற வருமானவரித் தாக்கல் திட்டங்கள் உள்ளன. வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு என்று என்ஆர்ஐ ப்ரீமியம் என்ற வருமானவரித் தாக்கல் திட்டம் உள்ளது.

டாக்ஸ் ஸ்மைல் சில்வர் மூலம் வருமானவரி தாக்கல் செய்தால் அதற்கு கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். அதுபோல் டாக்ஸ்மைல் கோல்டு மூலம் தாக்கல் செய்தால் ரூ.400 மற்றும் டாக்ஸ்மைல் ப்ரீமியம் மூலம் தாக்கல் செய்தால் அவற்றிற்குக் கட்டணமாக ரூ.2000 செலுத்த வேண்டும். வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் என்ஆர்ஐ ப்ரீமியம் மூலம் வருமானவரி தாக்க செய்ய வேண்டும் என்றால் அதற்காக அவர்கள் 69 அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.3100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

 

 

டாக்ஸ் ஷா(Tax Shah)

டாக்ஸ் ஷா(Tax Shah)

இந்திய வருமானவரித் துறையால் அங்கீகாரம் பெற்ற இன்னுமொரு இணையதளம் டாக்ஸ் ஷா ஆகும். 3 எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் வருமானவரி தாக்கல் செய்ய முடியும். இந்த இணையதளம் மூலம் வருமானவரித் தாக்கல் செய்வதற்கு ரூ.181 முதல் ரூ.2580 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டாக்ஸ் ஸ்பேனர்(Tax Spanner)

டாக்ஸ் ஸ்பேனர்(Tax Spanner)

இந்திய வருமானவரித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட டாக்ஸ் ஸ்பேனர்என்ற இணையதளம், மிகச் சிறந்த ஆன்லைன் டாக்ஸ் பிரிப்பேரர் என்று 2009 ஆம் ஆண்டு மணி டுடே மற்றும் 2010 ஆம் ஆண்டு மின்ட் ஆகியவற்றால் பாராட்டு பெற்றது. வருமானவரி செலுத்துவதற்கான தனியார் இணையதளத்திலேயே ஐடிஆர்-4 இ-பைலிங் வசதியைக் கொண்ட இணையதளம் டாக்ஸ் ஸ்பேனர் ஆகும்.

மைஐடி ரிட்டர்ன்(MyIT Return)

மைஐடி ரிட்டர்ன்(MyIT Return)

இந்திய அரசால் அங்கீகாரம் பெற்ற மைஐடி ரிட்டர்ன் இணையதளம் இந்தியாவிலேய மிகப் பெரிய வருமானவரி இ-ரிட்டர்ன் இன்டர்மீடியட்ரி (இஆர்ஐ) என்று அழைக்கப்படுகிறது. இந்த இணையதளம் 24 மணி நேர சேவையை வழங்குகிறது. ஆகவே இந்த இணையதளம் மூலமாக எங்கிருந்தும், எந்த நேரத்திலும் வருமானவரி அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியும்.

இன்கம் டாகஸ் இந்தியா(Income Tax India)

இன்கம் டாகஸ் இந்தியா(Income Tax India)

வரி சம்பந்தமான சேவைகளை வழங்கும் இன்கம் டாக்ஸ் இந்தியா என்ற இணையதளம், இந்திய வருமானவரித் துறையால் இயக்கப்படுகிறது. இந்த இணையதளம் 24x7 தொலைபேசி உதவி சேவையை மார்ச் மாதம் முழுவதும் வழங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+