
பாலிசிதாரர்களின் புகார்களைப் பெறுவதற்காக ஒரு தனி செல்லை ஐஆர்டிஎ ஏற்படுத்தி இருக்கிறது. ஆயுள் காப்பீடு மற்றும் இதர காப்பீட்டுத் திட்டங்களில் இருக்கும் புகார்களைத் தனித்தனியாக ஐஆர்டிஎவின் இந்த தனி செல் கையாளுகிறது. பாலிசிதாரர்களிடம் இருந்து புகார்களைப் பெறுவதில் இந்த செல் முக்கிய பங்கை ஆற்றுகிறது.
ஐஆர்டிஎ வில் புகார்களைத் தெரிவிப்பதற்கு முன்பாக பாலிசிதாரர்கள், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் தங்களின் புகார்களைத் தெரிவித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தெரிவித்த புகார்களுக்கு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பதில் அளிக்காமல் இருந்தாலோ அல்லது, அவர்கள் கொடுத்த பதில் உங்களுக்குத் திருப்தி அளிக்காமல் இருந்தாலோ ஐஆர்டிஎ வில் உள்ள புகார் செல்லுக்கு புகார்களை அனுப்பலாம். புகார்களை, ஐஆர்டிஎவின் ஆயுள் காப்பீட்டு பாலிசி அல்லாத புகார் செல்லுக்கு அனுப்ப வேண்டும்.
பாலிசிதாரரின் புகார்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பதில் அளிக்கவில்லை என்றால் அல்லது பதில் அளிக்க காலம் தாழத்தினால் அப்படிப்பட்ட புகார்கள் மீது ஐஆர்டிஎ புகார் செல் விரைந்து நடவடிக்கை எடுக்கும்.
பாலிசி காலம் அல்லது பாலிசி தொகை சம்பந்தமான சட்ட ரீதியான புகார்களை ஐஆர்டிஎ எடுத்துக் கொள்ளாது. அதற்கு சட்டரீதியிலான அமைப்புகளான இன்சூரன்ஸ் ஒம்புட்ஸ்மென், கன்ஸ்யூமர் ஃபோரா அல்லது சிவில் நீதிமன்றங்களை அணுக வேண்டும்.
மேலும் பாலிசிதாரர் அளிக்கும் புகார்களை மட்டுமே ஐஆர்டிஎ எடுத்துக் கொள்ளும். பாலிசிதாரர் சார்பாக அவர்களுடைய வழக்குரைஞர்களோ அல்லது, முகவர்களோ அல்லது மூன்றாவது நபர்களோ அளிக்கும் புகார்களை ஐஆர்டிஎ எடுத்துக் கொள்ளாது.
இமெயில் மூலமாக ஐஆர்டிஎவிற்கு புகார் அனுப்பும் போது, உங்கள் குறைகளை மிகத் தெளிவாக புகார் பதிவு படிவத்தில் எழுதி, அனுப்பு வேண்டும்.


Click it and Unblock the Notifications