கூட்டு வீட்டுக் கடன்: எதற்காக இதை தேர்வு செய்யவேண்டும்?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூட்டு வீட்டுக் கடன்: எதற்காக இதை தேர்வு செய்யவேண்டும்?
வீட்டு கடனை வாங்குவதற்கு முடிவு செய்து விட்டீர்களா?. அது சம்பந்தமாக சில வாய்ப்புகள் உள்ளன என்பதை மறவாதீர்கள். அதாவது கூட்டாகச் சேர்ந்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இது உங்களுக்கு பல நன்மைகளை கொண்டு வந்து தரும்.

 

(4 reasons why you should not buy gold now)

அவற்றுள் முதலாவது மற்றும் முதன்மையான காரணமாக அதிக கடன் தொகையை குறிப்பிடலாம். அதாவது அதிக அளவு கடன் தொகை தேவைப்பட்டால், கூட்டாக விண்ணப்பிக்கலாம். இதுவே சிறந்தது.

உதாரணமாக, கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலையில் இருந்து, இருவரும் சேர்ந்து கூட்டாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது இருவருடைய மொத்த வருமானத்தின் அடிப்படையில் அதிகளவு கடன் பெற முடியும். மனைவி வேலையில் இல்லாமல் இருந்தால் அவருக்கு கிடைக்கும் வட்டி அல்லது பிற வருமானங்களின் அடிப்படையில் கூட, கூட்டாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

வீட்டு கடன்கள் மீதான வரி சலுகைகளை எவ்வாறு பெருவது?

இரண்டாவது மற்றும் பிற முக்கியமான விஷயம் வரி ஆதாயம் ஆகும். வருமான வரி சட்டம் பிரிவு 80சி இன் கீழ், ரூ 1 லட்சம் வரை வீட்டு கடனின் முதலுக்கு வருமான வரிச் சலுகை கிடைக்கும் (ரூ 1 லட்சம், இந்த பிரிவின் கீழ் அனைத்து விலக்குகளுக்கான ஒட்டுமொத்த வரையறை ஆகும்). அதாவது நீங்கள் ரூ 1 லட்சம் அளவிற்கு வீட்டுக் கடனுக்கான முதலை திரும்பி செலுத்தும் பொழுது, பொது வருங்கால வைப்பு நிதி, எல்.ஐ. சி போன்ற பிற வரி இல்லா முதலீடுகளில் கவனம் செலுத்த தேவையில்லை.

மேலும், வருமான வரி சட்டம் 24ன் கீழ் உங்களுடைய வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு ரூ 1.5 லட்சம் வரை வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. ஆகவே கூட்டாக வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் ஒவ்வொரு விண்ணப்பதாரர்களுக்கும் 2.5 லட்சம் வரை வரிச் சலுகைகள் கிடைக்கும். அதாவது உங்களுக்கு மொத்தமாக 5 லட்சம் வரை வரியிலிருந்து விலக்கு கிடைக்கும்.

இதில் வரிக் கட்டமைப்பு மிக முக்கியமானது. அது சரியாக இருந்தால் மட்டுமே 5 லட்சம் வரை வரிச் சலுகைகள் கிடைக்கும்.

கூட்டு வீட்டுக் கடன் விஷயத்தில், கணவன் மற்றும் மனைவி, அல்லது ஒரு தந்தை மற்றும் மகன் சேர்ந்து விண்ணப்பிக்க முடியும். இதில் வீட்டின் உப உரிமையாளர்கள் மட்டுமே, கூட்டுக் கடனுக்கான இணை விண்ணப்பதாரர்களாக இருக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Joint home loans: Why you should opt for them?

Looking at taking a home loan? Do not forget one choice that you must make if you can - that is to opt for a joint home loan with a co-applicant.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?