
(A look at pension plans from mutual funds?)
"இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் சங்கங்களின் கூட்டுக்குழு (சி.ஆர்.இ.டி.எ.ஐ), ரியல் எஸ்டேட் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை ஒரு குறிக்கோளாகவே கொண்டு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவுக்கு "நிறுவன அந்தஸ்து" வழங்க வேண்டும் என்று நாங்கள் அரசை கேட்டுக் கொள்கிறோம்" என்று சி.ஆர்.இ.டி.எ.ஐ சேர்மன் லலித் ஜெயின் கூறியுள்ளார்.
மேலும் அவர், நிலம், நிர்வாகம், வங்கியியல் மற்றும் உழைப்பு ஆகியவற்றை உள்ளிட்ட நான்கு மடிப்பு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் இந்தியா, வீட்டு வசதியில் மிகையான ஒரு நிலையை எட்டி, வீட்டு விலைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
"மிக முக்கியமாக, அனைத்து நிலுவைகளையும் தீர்ப்பதற்காக ஒற்றை வழி திட்டமானது, விரைவான ஒப்புதல்கள் மற்றும் திட்டப்பணிகளின் அதிவேக நிறைவேற்றங்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடியதாகத் திகழ்கிறது." என்றும் கூறியுள்ள ஜெயின், அனைத்து மாநிலங்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில் பொருத்தமான விதிமுறைகளை விதிக்கும்படி புதிய அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை நிவாரணத் துறையின் முன்னாள் அமைச்சரான அஜய் மாக்கன் அவர்கள் ரியல் எஸ்டேட்காரர்களின் கோரிக்கைகளுக்கு ஊக்கமளித்ததாகவும், இவை "அனைவருக்கும் வீடு" என்ற அரசின் இலக்கை எட்டுவதற்கு உதவக்கூடிய யோசனைகள் என்று ஆமோதித்ததாகவும் திரு ஜெயின் கூறியுள்ளார்.
கடந்த திங்களன்று, யூனியன் காபினெட்டில் பொறுப்பேற்றுக் கொண்ட கிரிஜா வியாஸ் அவர்களை வரவேற்றுப் பேசிய ஜெயின், "புதிய அமைச்சர், குறைந்த விலையில் வீட்டு வசதி போன்ற கோரிக்கைகளை தக்க துறைகளின் மூலம் நிறைவேற்ற முயற்சிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications