ஒவ்வொரு மாதமும் வீட்டுகடன் தவணையை அடைக்க சிரமப்படுபவர்களுக்கு, எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின்(SBI Maxgain) என்ற திட்டம் பயனுள்ளதாக இருக்கும். உங்களிடம் அதிக கையிருப்பு இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், இந்த திட்டத்தை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் கட்டும் வட்டி சுமையை குறைக்கலாம்.
(Why interest rates on loans will not go down in a hurry?)
வட்டி சுமை குறைக்க மற்றும் ஒவ்வொரு மாதமும் அதிக பணம் கட்ட நினைத்தால் எஸ்.பி.ஐ. மேக்ஸ்கெயின் தான் சிறந்த தேர்வு.
திட்டத்தின் செயல்பாடு
எஸ்.பி.ஐ. மேக்ஸ்கெயின் திட்டத்தின் கீழ் நீங்கள் வீட்டுக்கடன் வாங்கியிருந்தால், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடன் தொகைக்கு ஈடாக மேல்வரைப்பற்று (ஓவர்டிராப்ட்) தொகையை உங்களுக்கு அளிக்கும். இந்த கணக்கில் எப்போதெல்லாம் அதிக பணத்தை வரவு வைக்கிறீர்களோ, அந்த பணம் கடனை திருப்பிச் செலுத்தும் பணமாக எடுத்துக் கொள்ளப்படும். இதனால் வட்டி சுமை குறையும்.
உதாரணம்
எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின் திட்டத்தின் கீழ் கட்ட வேண்டிய நிலுவை கடன் தொகை 15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின் கணக்கில் 2 லட்சம் இருந்தால், அது கடனுக்கான வரவாக எடுத்துக் கொள்ளப்படும். இதனால் வட்டி சுமை குறையும். மேலும் இது நடப்பு கணக்காக (கரண்ட் அக்கௌன்ட்) இருப்பதால், காசோலை ஏடு, ஏ.டி.எம் மற்றும் டெபிட் கார்டு, இனையதளத்தில் வங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வசதிகளும் அளிக்கப்படும்.
வட்டி விகிதம்
எஸ்.பி.ஐ பொதுவாக வீட்டுக்கடனுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை விட எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின் திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் தான். இன்றைய நிலவரப்படி வீட்டுகடனுக்கு எஸ்.பி.ஐ 9.95% மிதவை வட்டி வசூல் செய்கிறது. இதுவே மேக்ஸ்கெயின் திட்டம் என்றால் 0.25% அதிகமாக வட்டி வசூலிக்கிறது. இது கடன் தொகை ஒரு கோடிக்கு கீழ் இருந்தால் தான். எஸ்.பி.ஐ மேக்ஸ்கெயின் திட்டத்தில் குறைந்தபட்சமாக ஐந்து லட்சம் கடன் தரப்படும். அதிகபட்ச கடன் தொகைக்கு எந்த வரைமுறையும் இல்லை.
செயல்முறை கட்டணம்
எஸ்.பி.ஐ வாங்கும் அதே செயல்முறை கட்டணத்தை தான் எஸ்.பி.ஐ. மேக்ஸ்கெயின் திட்டமும் வாங்குகிறது.
More From GoodReturns

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications